நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Saturday, December 15, 2012
சாட்டை.....திரைப்படம்
சாட்டை....
எத்தனை சாட்டைகள் வந்தாலும்
எத்தனை சாட்டையடிகள் வாங்கினாலும்..
பலர் மாறப்போவதில்லை..மாறவும் மாட்டார்கள்...
தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று
வெட்டி நியாயங்கள் பேசும் அவர்களை என்னவென்று சொல்வது..
வெயிலில் பயிற்சி தந்தால் கறுத்துவிடுவேன்..
என்று சொல்லும் ஆசிரியர்கள்
மாணவர்களின் எதிர்காலம்
கறுப்பாவதை மறக்கிறார்கள்...
இவர்களைத் திருத்த எத்தனை சாட்டைகள்
வந்தாலும்..பயனில்லை
எத்தனை சாட்டையடிகள் கொடுத்தாலும்
பயனில்லை...
மாணவர்களின் நலனுக்காகவும் சிறந்த எதிர்காலத்துக்காகவும்..
உழைக்கும் ஆசிரியர்கள் உண்மையிலேயே சிறந்தவர்கள்...
அவர்களை நான் வணங்குகிறேன்....
ஆனால்..சிலரை..இகழ வார்த்தையில்லாமல் தவிக்கிறேன்...
இவர்களைத் திருத்த எத்தனை சாட்டைகள்
வந்தாலும்..பயனில்லை
எத்தனை சாட்டையடிகள் கொடுத்தாலும்
பயனில்லை...
http://blog.tamilish.com/pakkam/5
Friday, December 7, 2012
இனிய நினைவுகள்...
இனிய நினைவுகள்...
என் மனதில்....
நண்பன் தோளில் சாய்ந்து..
கதை பேசிய நிமிடங்கள்...
ஒன்றாய் சேர்ந்து அரட்டையடித்த நேரங்கள் ..
வீட்டில் பொய் சொல்லிவிட்டு...
பள்ளிக்கும் மட்டம் போட்டு விட்டு ...
ஊர் சுற்றிய நாட்கள்...
சின்ன சின்ன சண்டைகள்...
அனைத்தும்....
மறக்க முடியாத தருணங்கள்...
மீண்டும் வேண்டுமடா...வாழ்வில்.
இது போன்ற இனிய நினைவுகள்...
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, October 3, 2012
வாழ்க பல்லாண்டு......
இன்றும் இனிக்குதடா என் நினைவில்...
உன்னை என் வயிறு சுமந்த தருணங்கள்...
கருப்பையில் மிதந்து கொண்டே..
உன் கால்களால் நீ எத்திய சுகம்...
இன்றும் இனிக்குதடா என் நினைவில்...
உலகத்தை நீ எட்டிப்பார்த்த நேரம்...
உன்னை நான் பிரசவித்த நேரம்...
தெவிட்டாத அடிக்கரும்பாய்..
இன்றும் இனிக்குதடா என் நினைவில்...
உன்னை புறந்தள்ள நான் பட்ட இடுப்புவலி..
அது இடுப்புவலி அல்ல...
என் பெண்மையைப் பரிப்பூரணமாக்கிய உண்ணதமான வலி...
வருடங்கள் ஐந்து ஆகிவிட்டது நீ பிறந்து..
ஆனால்...உன்னை சுமந்த சுகமான நினைவுகள்
இன்றும் இனிக்குதடா என் நினைவில்...
வாழ்த்துகிறேன்...என்னவனே..
வாழ்த்துகிறேன்...தூயவனே...
வாழ்த்துகிறேன்...என் பிம்பமே..
வாழ்த்துகிறேன்...என் உயிரே...
இந்த இனிய நாளில்...உன் பிறந்த நாளில்...
உன் கலைகள் சிறக்க...இந்தப் புவி மணக்க
வாழ்க பல்லாண்டு......
http://blog.tamilish.com/pakkam/5
Thursday, September 27, 2012
தூக்குதண்டனைதான்....உனக்கு..
பெண்களைத் தூற்றும்..கவிஞர்களே...
சற்று..ஆண்களின் அவலங்களை...எழுதுங்களேன்....
சுயநலவாதிகள்....பெண் மனம் அறியா..சுயநலவாதிகள்..
ஆண்கள்!!!!!!!!
தேவைக்கு சேவை செய்ய சொல்லி...
செருப்பாய் நினைப்பர் பெண்களை...
பெண்..நெருப்பாக மாறினால்..
என்னவாகும்..அவர் நிலைமை.....
வல்லவர்கள் ஆண்கள்...
நம்பிக்கை துரோகம் செய்வதில்..
சிறந்தவர்கள் ஆண்கள்...
பெண் மனதைக் காயம் செய்வதில்...
ஆண்களின் இயல்பே.....
பெண்களின் பலவீணத்தை...பயன்படுத்திக்கொள்வதோ....
இனிப்பான பேச்சு...பொய்யான சிரிப்பு....
இதுதான்....ஆணோ....
பழம்..பாலில் விழும் வரை...
நடித்திடுவர்
பழத்தின்..சுவை குறைந்தவுடன்...
வெறுத்திடுவர்....
பெண்கள்...
கெஞ்சினால்..மிஞ்சும்...ஆண்களே..
பெண் கெஞ்சுவது...
அடங்கி போய்.அல்ல...
உன் அன்பில் மயங்கி போய்தான்...
அன்பை..மதிக்க தெரியாத..
ஆண்களே....
அன்பெனும்..வேஷம்.போட்டு..
ஏமாற்றும்..அழகர்களே...
பெண்மை...அடங்கி இருப்பது..
உன்னைக் கண்டு பயந்து..அல்ல..
உன் விஷ சொற்களை...
கேட்க மனவலிமை..இல்லாமல்தான்...
உன்...சொல் அம்பு...குத்தி..குத்தியே...
நெஞ்சம்..குருதியில்.குளித்து விட்டது..
இன்னமும்...இடமில்லை நெஞ்சில்..
உன் அம்புகளை...ஏற்க...
நிறுத்திக்கொள்.....உன் காதல் விளையாட்டை...
அடக்கிக் கொள்...உன் ஆண்மையின் ஆட்டத்தை..
இறுதியாக சொல்கிறேன்....
என் காதலைப் பிணமாக்கி...
அதில் நெருப்பூட்டி....
குளிர்காயும்....கொலைக்காரன்..நீ...
தூக்குதண்டனைதான்....உனக்கு..
என் மனம் எனும் நீதிமன்றத்தில்...................
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, September 26, 2012
மெளனம் கலைத்து வெளியே வா.....
ஆயிரம் ஆயிரமாய் மல்லிகைப் பூ
பூத்துக்குழுங்கும் தோட்டத்தில்..
ரோஜா செடியை நட்டால்..
அதிலிருந்து மலர்வது ரோஜாதான்....
அதன் குணம் மாறாது...
அதன் மணம் மாறாது...
ஆனால்.......
நான்கு பேர் சேர்ந்து நஞ்சூற்றினால்
மனித குணம் மாறுவதேனோ....????
பழையன கழிதலும்...
புதியன புகுதலும் பொங்கலுக்குதானே...
நட்புக்கு அல்லவே...
நம் உறவுக்கு அல்லவே.....
மெளனம்..உன் மெளனம்...
என்னை மிரட்டுகிறது...
என் காதில் ஓலமிடுகிறது....
மெளனம் கலைத்து வெளியே வா.....
என் மெளனம் கலைக்க வெளியே வா....
மெளனம்...என் மெளனம்
என்னையே மறக்க செய்கிறது...
உன்னை வெறுக்க செய்கிறது...
மெளனம் மரணமாய் மாறும் முன்
சத்தம் செய்...முடிந்தால்...
ஒரு முத்தம் செய்....
முத்தத்தினால்...ஒரு யுத்தம் செய்......
http://blog.tamilish.com/pakkam/5
Monday, September 24, 2012
வாழ்க்கையே...யார் நீ????
வாழ்க்கையே...யார் நீ????
ஏமாற்றம் எனும் நாவலுக்கு எழுத்தாளனா...?
சோகம் எனும் கவிதைக்கு கவிஞனா...?
உயிர் சொட்டும் என் கனவுகள்
காகித பூவாய் மாறும் காரணம் என்ன...?
வாழ்க்கையே யார் நீ????
மலர்கள் கொஞ்சும் சோலையா...?
சிங்கம் வாழும் குகையா....?
வாசனை திரவியமா...?
நாற்றம் மிகுந்த குப்பைக்கூளமா...?
தெளிவும் குழப்பமும் மாறி மாறி என்னைக் கொல்கிறதே....
வாழ்க்கையே யார் நீ????
தேவர்களின் தேவதையா...?
எமனின் தூதுவனா...?
அழகிய ரோஜாவா...?
அதிலிருக்கும் முள்ளா...?
கதாநாயகனா...?
வில்லனா...?
வாழ்க்கையே யார் நீ????
http://blog.tamilish.com/pakkam/5
Thursday, September 13, 2012
என்ன உறவு நமக்குள்...?
யோசிக்கிறேன்....
என்ன உறவு நமக்குள்...?
நட்புடன் பழகியதால்...
நண்பன் என்றா உறவா....
தோள் கொடுத்து உதவியதால்...
உற்ற தோழமை என்ற உறவா...
இதயம் இணைந்ததால்...
காதல் என்ற உறவா....
இதழ்கள் சேர்ந்ததால்..
கணவன் மனைவி உறவா...
ஊடலும் அதன் பின் கூடலும்...
நமக்குள் நடக்கிறதே...
என்ன உறவு நமக்குள் ??
விடை தேடி அலைகிறேன்...
தினம்...தினம்.....
என்ன உறவு நமக்குள் ????
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, September 12, 2012
நாளையே திருமணம்
"காத்திருந்தாள்....
தன் காதலன் வருகைக்காக..
மணல் மேலே படுத்து...வானத்தைப் பார்த்து..."
"காதலனும் வந்தான்...
அவன் மடியில் சாய்ந்தாள்...
தழுவினர்...மகிழ்ந்தனர்....."
கண்ணீர்..அவள் கண்ணில்....
ஏன் என்றான் காதலன்..."
"தழுவுதல்...மகிழ்தல்..
எல்லாம் சரிதான்...
திருமணம் எப்போது என்றாள்"
"விரைவில் உன்னைக் கரம் பிடிப்பேன் ,
ஆனால்..
அதற்கு முன் இவ்வுலகின் துன்பப்பகுதியை மறந்து
இருவரும் இன்பக்கனியில் திளைத்திடுவோம்...
காதல் எல்லை எதுவரை என்று
கண்டறிவோம் என்றான்"
அவளை அணைத்தான்..
திடீரென்று...
நில்லுங்கள்...என்ற குரலொலி
திரும்பிப் பார்த்தான்...
காதலியின் தோழி அவன் முன்...
தோழி கூறினாள்....
" காதல் லீலை புரிபவரே...
குறை ஏதும் இல்லை உன் அன்பில்
ஆனால், நீண்டக்காலம் காதல் செய்யவோ
இப்பெண்ணின் பெற்றோர் விரும்ப மாட்டார்கள்...
தள்ளி போடாதீர் மணவிழாவை...
வயதான கொக்கும் கூட கொத்திப் போகும்
இக்கன்னி மீனை..."என்றாள்..
"அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க...
வயோதிகன் எவனும் இவளை
மணக்காமல் இருக்க..சூட்டி விடு மணமாலையை...." என்றாள்
" என் இதய அறையில் இருக்கும் பூவை
கிழத்தேனிக்கு இரையாக்க மாட்டேன்.
" என்றான் கண்ணாளன்...
என்று
மிக அழகாகப் பாடியுள்ளார் அம்மூவனார் ஐங்குறுநூறு பாடலில்..
பாடல்(180)
http://blog.tamilish.com/pakkam/5
Monday, September 10, 2012
சேரன்...மறவன்....
தலைக்குனியா மன்னனவன்...
தலைக்கு மேல் தூக்கிதான் கொஞ்சுவான்...
தான் பெற்ற பிள்ளையைக்கூட...
கரம் பிடித்தவளின் இதழில் இதழ் பதித்தால்...
குனியக்கூடுமே என்று...
நெற்றியில் முத்தமிடும்....அரசனவன்..
வளையாத முதுகெலும்பு படைத்தவனோ...
என்று ஆச்சரியமுற்றவர் பலர்....
தொண்டி துறைமுகத்தை ஆண்ட தலைவனவன்...
மூவன் எனும் வேந்தனை வீழ்த்தி...
அவன் பற்களைக் கோட்டை வாயில் கதவில்
தொங்க விட்ட வீரனவன்.....சேரனவன்...
பார் எங்கும் புலிக்கொடியைப்
பறக்க விட்ட சோழத்திருமகனைத் தோற்கடிக்க
படைத்திரட்டினான்...போர்தொடுத்தான்....
ஒலியைக் கிழிக்கும் ஒளியாய் கிளம்பினான்....
வெற்றி யாருக்கு...தோல்வி யாருக்கு என
கணிக்க முடியாத போர்களமாய்..இருந்தது....
வெற்றித் திருமகளோ....சோழனின் பக்கம் சாய்ந்தாள்...
ஆற்றல் முழுவதும் காட்டியும்...
சேரனவன் சிக்கிவிட்டான்...புலிக்கொடி வேந்தனிடம்...
சிறையில் சேரனோ...அணு அணுவாய்
சிதைந்து போனான்...தோல்வியின்...வலியால்....
தாகம் எடுக்க....ஒரு நாள்....
தண்ணீர் கேட்டான் சேரன்...
காவலாளி தாமதித்த காரணத்தினாலே.....
கோபம் கொண்ட அப்பெருந்தலைவன்....
எதிரியின் சிறையில்...நாய் போன்று
வாழ்வது இழிவு....
உயிரை விட்டொழிப்பதே...சிறப்பு..
என....கடைசி மூச்சை ..காற்றோடு கலந்து விட்டான்...
இப்படி..சேரனின் புகழ் பாடுகின்றார்
"சேரமான் கணைக்கால் இரும்பொறை.
(புறநானூறு : பாடல் 74)
http://blog.tamilish.com/pakkam/5
Sunday, September 9, 2012
அவரவர்..உள்ளம் மட்டும் உணரும்....
தவறுகள் எல்லாம் தவறுகள் அல்ல..
நீ..தவறாய் நினைக்காத போது...
நல்லதும் கூட தவறாய் போகும்...
தவறாய் நீ நினைத்து விட்டால்....
கொலையும் கூட சரியே..
நீ ..சரி என்று நினைத்தால்...
தானம் கூட பிழையே...
நீ தவறு என்று எண்ணிவிட்டால்.....
சரியோ....தவறோ
அவரவர் மனம் மட்டும் அறியும்....
நல்லதோ..கெட்டதோ...
அவரவர்..உள்ளம் மட்டும் உணரும்....
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, September 5, 2012
யாதும் ஊரே ; யாவரும் கேளீர் !!!
தொப்புள் கொடி பந்தமில்லை...
ஆனால்,யாவரும் ஒரே குலமாம்....
இரத்த சொந்தமில்லை....
ஆனால், அனைவரும் ஒரே இனமாம்....
கண்ணாடி உன் பிம்பத்தை காட்டுவது போல.....
நல்லதும் கெட்டதும் பிறருக்கு நீ இழைத்ததே
உனக்கு வருமாம்....
மேகங்கள் வந்து மறைவதுபோல்...
இன்பமும் துன்பமும் மாறிவருவது போல்
இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான்
மனித வாழ்க்கையாம்....
எதிர்நீச்சல் போட்டு மெம்மேலும்
உயர்பவரே.....மானுடத்தில் மாணிக்கமாம்....
பணம் உள்ளவரை போற்றுதல் இழிவாம்...
பணம் இல்லாதவரை தூற்றினால்...
நீயே கழிவாம்.....
விஷயங்கள் ..பல கற்ற...
பெரியோரின் சொற்படி நடப்போம்..
என புறநானு பாடலில் (192)
உலகிற்கு உரைக்கிறார்..பாரினில் சிறந்த
கணியன் பூங்குன்றன்...
http://blog.tamilish.com/pakkam/5
Monday, September 3, 2012
தொண்ணூற்று ஒன்பது
அதிசயித்தேன் இயற்கை அன்னை அளித்த
பூவினங்களை எண்ணி....
ஆச்சரியித்தேன் சங்கத்தமிழ் தந்த
மலர்களைப் படித்து...
தொண்ணூற்று ஒன்பது வகை பூவாம்....
குறிஞ்சிப்பாட்டில் கூறுகின்றார்...
கவிநாயகர் கபிலர்....
ஒரு முறை படிக்கவே மூச்சுமுட்டுதமா...
மறுமுறை படிக்கவோ..நெஞ்சம் துள்ளுதம்மா...
நான் சுவைத்த தமிழின் சுவையை..
நீங்களும் சுவைத்திட...
இதோ அணிவிக்கிறேன்..
உங்கள் கழுத்தில்..கபிலர் தொடுத்த...
பூச்சரத்தை......அகர வரிசையில்.....
1. அடும்பு
2. அதிரல்
3. அவரை - நெடுங்கொடி அவரை
4. அனிச்சம்
5. ஆத்தி - அமர் ஆத்தி
6. ஆம்பல்
7. ஆரம் (சந்தன மர இலை)
8. ஆவிரை - விரிமலர் ஆவிரை
9. இருள்நாறி - நள்ளிருள் நாறி
10. இலவம்
11. ஈங்கை
12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்
13. எருவை
14. எறுழம் - எரிபுரை எறுழம்
15. கண்ணி - குறு நறுங் கண்ணி
16. கரந்தை மலர்
17. கருவிளை - மணிப்பூங் கருவிளை
18. காஞ்சி
19. காந்தள் - ஒண்செங் காந்தள்
20. காயா - பல்லிணர்க் காயா
21. காழ்வை
22. குடசம் - வான் பூங் குடசம்
23. குரலி - சிறு செங்குரலி
24. குரவம் - பல்லிணர்க் குரவம்
25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி
26. குருகிலை (குருகு இலை)
27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம்
28. குவளை (மலர்) - தண்கயக் குவளை
29. குளவி (மலர்)
30. குறிஞ்சி
31. கூவிரம்
32. கூவிளம்
33. கைதை
34. கொகுடி - நறுந்தண் கொகுடி
35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை
36. கோங்கம் - விரிபூங் கோங்கம்
37. கோடல்
38. சண்பகம் - பெருந்தண் சண்பகம்
39. சிந்து (மலர்)
40. சுள்ளி மலர்
41. சூரல்
42. செங்கோடு (மலர்)
43. செம்மல்
44. செருந்தி
45. செருவிளை
46. சேடல்
47. ஞாழல்
48. தணக்கம் (மரம்)
49. தளவம்
50. தாமரை - முள் தாள் தாமரை
51. தாழை மலர்
52. திலகம் (மலர்)
53. தில்லை (மலர்)
54. தும்பை
55. துழாஅய்
56. தோன்றி (மலர்)
57. நந்தி (மலர்)
58. நரந்தம்
59. நறவம்
60. நாகம் (புன்னாக மலர்)
61. நாகம் (மலர்)
62. நெய்தல் (நீள் நறு நெய்தல்)
63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்)
64. பகன்றை
65. பசும்பிடி
66. பயினி
67. பலாசம்
68. பாங்கர் (மலர்)
69. பாதிரி - தேங்கமழ் பாதிரி
70. பாரம் (மலர்)
71. பாலை (மலர்)
72. பிடவம்
73. பிண்டி
74. பித்திகம்
75. பீரம்
76. புன்னை - கடியிரும் புன்னை
77. பூளை - குரீஇப் பூளை
78. போங்கம்
79. மணிச்சிகை
80. மராஅம்
81. மருதம்
82. மா - தேமா
83. மாரோடம்
84. முல்லை - கல் இவர் முல்லை
85. முல்லை
86. மௌவல்
87. வகுளம்
88. வஞ்சி
89. வடவனம்
90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை
91. வள்ளி
92. வாகை
93. வாரம்
94. வாழை
95. வானி மலர்
96. வெட்சி
97. வேங்கை
98. வேரல்
99. வேரி மலர்
http://blog.tamilish.com/pakkam/5
anonymous...தோழியே..உங்களுக்காக...
கவியின் அழகை ரசிக்கத் தெரியாத கழுதைகளே...
சிரிக்கிறேன் உங்கள் அறியாமையை நினைத்து...
செருக்கும் திமிரும் ஆணவமும் கொண்ட ஆந்தைகளே...
வருந்துகிறேன் உங்கள் அவல நிலையைக் கண்டு...
படித்ததுண்டா..அறிவிலிகளே ..
இது வரை கவிதை நூலை...
சொல்கிறேன்....கடுகளவும் மானம் இருந்தால்...
படித்துப்பாருங்கள்....கவிதை நூல்களை....
உணர்ச்சியும்...அதற்கு..உருவமும்..
இருந்தால்தான் கவிதை....
எனதெழுத்தில் ..உணர்ச்சியும் இருக்கும்...
அதற்கு உயிரும் இருக்கும்....
குரைக்கும் நாய் சூரியனை என்ன செய்ய முடியும்.....??
நான் சூரியன்...நீ????
பாவம்....
என் கவியில் குறைக்கூறும் பெண்ணெ...
மறுமுறை...உன் பெயரையும் குறிப்பிடு....
அதற்கும் கவி சொல்கிறேன்...உணர்ச்சியோடு.....
பிறர் முதுகைப் பார்ப்பதை விடுத்து...
உன் முகத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்து...
இதுவே..உனக்காக நான் சொல்லும் கருத்து......
http://blog.tamilish.com/pakkam/5
Sunday, September 2, 2012
சொர்க வாசல் திறக்குமா????
இயற்கை அழகிற்கும் வளத்திற்கும் பஞ்சமில்லாத ஊர். அழகில் மட்டுமா, இனத்தையும் உரிமையையும் காக்க உயிரையே தியாகம் செய்யத் துணியும் மறத்தமிழர்கள் வாழும் ஊர். இவை அனைத்தும் இருந்தும் சுதந்திரம் இல்லை. சொந்த மண்ணிலே அகதிகளைப் போலவும் திருடர்களைப் போலவும் பயந்தும் மறைந்தும் வாழ வேண்டிய சூழ்நிலை. என்ன கொடுமையடா இது.
மக்கள் படும் இன்னல்களுக்கு மருந்தாக பிறந்தவந்தான் கனலன். சிறுவயது முதலே கொடுமையையும் வறுமையையும் சித்ரவதையையும் பார்த்து அனுபவித்து , பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா" என கூக்குரலிட்டு தனது மக்களுக்காக உயிரையும் துச்சமென நினைத்தவன் கனலன். தன்னுடன் தம்மைப் போல வீர நெஞ்சம் படைத்த நண்பர்களுடன் ஒன்றிணைந்து தமதுரிமையை நிலைநாட்ட உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இராணுவப்படையை உருவாக்கியவன் கனலன்.
ஒவ்வொரு நாளும் மேகங்கள் உருவாகிக் களைவது போல ஒவ்வொரு தலைவர்களும் கனலனின் படையை வீழ்த்த முயன்றனர். ஆனால் சிங்கத்தை வீழ்த்த செந்நாயால் முடியுமா? வேண்டமடா இந்த விஷப்பரிட்சை என்று அஞ்சி ஓடி விட்டார்கள். ஆனால் மனித இதயமே இல்லாத கொடூரமான நயவஞ்சகன் ஆட்சிக்கு வந்தான். மனித ரூபத்தில் நடமாடும் அரக்கன் அவன். நேர்வழியில் போராட துணிவில்லமால் முதுகில் குத்திய கோழை. அவன் தான் நண்டிமித்ரா. இந்த பாதகனால் மக்கள் படும் அவஸ்தையும் படுகின்ற இன்னல்களும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை.
பச்சிளங்குழந்தைகள் முதல் பண்பட்ட முதியோர்கள் வரை இவன் அதிகார ஆட்சியினால் ஆயிரம் ஆயிரமாய் செத்து மடிந்தனர். பள்ளி சிறுவர்கள் கூட புதரிலும் குழியிலும் ஒளிந்து கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. எந்நேரத்தில் குண்டு மழை பெய்யும் என்ற ஐயம் நேற்று பிறந்த குழந்தையின் மனதைக் கூட ஆட்கொண்டது. நிறைமாத கற்பிணிகளுக்குகூட தயவு காட்டாத கேவலமானவன் அவன். கன்னிப் பெண்கள் கற்பை சூரையாடும் அற்பப்புத்திக் கொண்டவன்.
கனலனோ எந்த எதிர்ப்பு வந்தாலும் தன் படைகளுடன் மக்களின் நலனுக்காக போராடி வந்தான். மக்கள் கனலனைத் தன் இதயக் கோவிலின் வைத்து போற்றினார்கள். தங்களைக் காக்க கனலன் இருக்கிறான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு நாட்களைக் கடத்தினார்கள். நண்டிமித்ராவின் இரக்கமற்ற இராணுவத்திற்கும் நேர்வழி மட்டுமே தெரிந்த கனலனின் இராணுவத்திற்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. மக்களை மட்டும் குறிவைத்து நகர்ந்தது நண்டிமித்ராவின் இராணுவம். நாளுக்குநாள் மக்கல் ஆயிரங்கணக்கில் செத்து மடிந்தனர். மக்களின் இறப்பு எண்ணிக்கை உயர உயர நண்டிமித்ராவின் ஆணவமும் ஆனந்தமும் பல்மடங்காயின.
உலக நாடுகளின் கூக்குரலுக்குச் செவிச்சாய்க்காமல் செருக்குப் பிடித்த மத யானையைப் போல் திரிந்தனர் நண்டிமித்ராவின் படைவீரர்கள்.காட்டிக்கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவும் பிறந்த சில ஈனப்பிறவிகளால் சற்றே சரிவு கண்டது கனலனின் படை. இறுதியில் சிங்கத்தைச் சாய்த்து விட்டோன் என்று ஒநாய்கள் போல் ஓலமிட்டனர். அறிவில்லாதவர்கள் அவர்கள். சுட்டெறிக்கும் சூரியனைச் சுண்டு விரலால் சுழற்ற முடியுமா? சீறி வரும் சிறுத்தையை சிறைப்பிடிக்கலாகுமா?
கனலன் எரிமலைப் போன்றவன். அவனை அடக்க யாரால் முடியும். எத்தனை முறை காயப்பட்டாலும் , மக்கள் சஞ்சீவி வேர்களாய் மாறி அவன் காயத்தை ஆற்றுவார்கள். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது வந்து நம்மையும் நம் இனத்தையும் காப்பாற்றி சொர்க வாசலை திறந்து வைப்பான என மக்கள் நம்பிகின்றனர். நானும் நம்புகிறேன்.
http://blog.tamilish.com/pakkam/5
Thursday, August 30, 2012
தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை....
தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை....
தொந்தரவு செய்கிறேன்..தோழிகளை என்னுடன் பேச சொல்லி...
தொடர்பு இல்லாத நண்பர்களைக்கூட அழைக்கிறேன்...தொலைபேசியில்...
வன்முறையானப் படங்களைப் பார்க்கிறேன்...
நகைச்சுவை துணுக்குகளைத் தேடி அலைகிறேன்...
காதல் காட்சிகளை மட்டும் வேண்டாமென மறுக்கிறேன்...
காதல் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல...
உன் ஞாபகம் என்னுள் வரக்கூடாது என்பதற்காக....
உன் நிழல் படும் இடத்திற்குக்கூட வர தயங்குகிறேன்....
உன் சுவடு என்னை பாதிக்குமோ என்று....
எண்ண அலைகள்....
எனக்குள் தேங்கி வழியும்..
உன் நினைவலைகள்.....
அனுதினமும்.....மோதி மோதி காயம் செய்கிறது...மனதை....
அதனால்தான் ..தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை.....
http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, August 28, 2012
நீயோ..கடவுளாகிவிட்டாய்
சந்தர்ப்பவாதி மனிதன்...
சந்தர்ப்பவாதிதான் மனிதன்...
சந்தர்ப்பவாதியாக இருந்தால்தான் அவன் மனிதன்..
இல்லையென்றால்..அவன் கடவுள்...
நான் மனிதன்....
நீயோ..கடவுளாகிவிட்டாய் என் முன்....
என் கடவுளே...உன்னை யாசிக்கிறேன்....
அதற்குமேல் உன்னை நேசிக்கிறேன்....
ஆசிர்வதி..கேட்ட வரங்களைப்
பரிசாய்..கொடுத்து
http://blog.tamilish.com/pakkam/5
பாவியாய் மாறினேன்.....
ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது....
என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்....
யாராக இருந்தாலும் ..என்னை அள்ளி அணைத்தாலும்....
கொஞ்சி மகிழ்ந்தாலும்....
தாயைத் தேடி..அழையும்..குழந்தைப் போல்..
உன்னை தேடி அழைகிறேன்....
தள்ளி நிற்கவும் முடியாமல்....
விட்டுக்கொடுக்கவும் முடியாமல்....
உன்னை சேர்ந்து வாழவும் முடியாமல்...
தினம்...தினம்.....சாகிறேன்....
ஆதலால்தான் சொல்கிறேன்....
ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது....
என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்....
உன்னை எண்ணியெண்ணி....ஆவியாய் அழைகிறேன்...
பாவியாய் மாறினேன்.....
முழுதாய்..அறிவிழக்கும் முன்....
ஒரு மணி நேரமாவது..ஒரு நிமிடமாவது....
என்னுடன் பேசிவிடு....ஒரு நாளில்...
அன்பாக கேட்கிறேன்...மறுக்காதே...
பேசிவிடு...நான் முழுவதும் கிறுக்காய்
மாறும் முன்...
http://blog.tamilish.com/pakkam/5
Friday, August 17, 2012
என் நினைவுகளிலிருந்து....
தேடி அலைகிறேன்...உன் முகம் இருக்கும்
புகைப்படங்களை......
நேரில்தான்..உன் முகம் காட்ட மறுக்கிறாயே.....
என் கண்ணீர்தான்...உனக்கு இன்பம் தரும் என்றால்...
சொல்......
தினம் தினம் அழுவேன்......நீ சிரிக்க....
கண்ணை மூடினால்...கனவில் வருவாயென்று....
உறங்காமலே...இருக்கிறேன்....
நினைவிலும் கொல்கிறாயே....
இதழ்கள் சேர்ந்த நேரம்....நம் இதயம் கலந்த நேரம்...
உடல்கள் இணைந்த நேரம்...நம் உயிர்கள் உறைந்த நேரம்....
என் மார்பில் நீ கண் அசந்த நேரம்....
உன் தோளில் நான் தலை சாய்த்த நேரம்.....
அழியாமல் கொல்கிறது..என் நினைவுகளிலிருந்து....
இடியைத் தாங்கும் பாறையிடம் வரம் கேட்கிறேன்
உன் உறுதி என் மனதுக்கு வேண்டுமென.....
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, August 15, 2012
மறக்க மாட்டேன்.....
முள்ளு மேல் படுக்கனுமா ??
நெருப்பு மேல் நடக்கனுமா ??
ஆழ் கடலில் மூழ்கனுமா ??
எரிமலை உள்ள....போகனுமா ??
நஞ்சு தின்னனுமா ??
இல்லை....உயிரை விட்டொழிக்கனுமா ??
சொல்லு....
கால் தூசிக்கு சமம்...
ம்ம்ம்..என்று சொன்னா போதும்....
ஒரு நொடியில் செஞ்சிடுவேன்.....
ஆனால்...சொன்னாயே..ஒரு வார்த்தை...
நீ சொன்ன வார்த்தையிலே....
ஊசலாடுது...மனசு....
நீ காட்டுன வெறுப்பினிலே....
விட்டு பிரியுது...உசுரு..
நீ சொன்னது சொல் இல்ல....
என் ஆவிய திருட வந்த வில்லு....
ஏழு ஜென்மம் இருப்பது உண்மையினா.....
அப்பவும்...நெனச்சிருப்பேன்..உன்னை....
மறக்க சொல்லி கெஞ்சாத...
வேணும்னா....என்னை அணைக்க சொல்லி கொஞ்சு...
http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, August 14, 2012
கவிதையல்ல...கதை சொல்கிறேன்.....கேளுங்கள்...
ஒரு பூவின் கதை...
பூவின் காதல் கதை......
அனாதை..பூ அது....ஆதரவில்லா..பூ அது...
துணைத்தேடி..ஏங்கியது....
வண்டொன்று வந்தது...
காதல் கொண்டது......
காதல் வசனங்கள் பேசியது....
பூவின் நிலையறிந்து...துணையாய் இருப்பது போல்
நடித்தது....
கொஞ்சம் கொஞ்சமாய்....தேனை உறிஞ்சியது....
தேனும் தீர்ந்தது....
வண்டோ வேறு பூவை நோக்கிப் பறந்தது....
பாவம்.....பூ..மீண்டும் அனாதையானது....
பூவிற்குத் தெரியவில்லை....
வண்டு தேனுக்காகக் காதல் கொண்டது.....
வண்டை எண்ணி..பூ தினம் தினம் அழுதது..
வண்டு அதே காதல் லீலைகளை புதிய பூவிடம் ....
காட்டிக் கொண்டிருந்தது....
இப்பொழுதும்...அனாதை பூ அழுகிறது...
இறைவனிடம்...மன்றாடுகிறது.....
வண்டுகளே இல்லா உலகம் வேண்டுமென்று.....
http://blog.tamilish.com/pakkam/5
Monday, August 6, 2012
சிபாரிசு செய்கிறேன்......உங்களுக்காக...
நல்லவர்களாய் நடிக்கும் நரிகளோடு சேர்ந்தால்...
நல்லவர் கூட நரியாய் தெரிவர்..நல்லவருக்கு...
குழிப் பறிக்கும் கயவர்கள் உடன் இருக்க....
கள்ளமற்றவரை கயவராய் நீ நினைக்க....
பொய்யான நட்பு உன்னை..ஆட்கொள்ள...
மெய்யான என் உறவை நீ உதறி தள்ள..
தீயில்லாமலே...எரிந்தது இதயம்....
நீரில்லாமலே..கறைந்தது....உயிர்...
உலகமகா நடிகர்களே.....
மானம் இல்லா மடையர்களே....
நயவஞ்சகத்தில்....சிறந்தவர்களே......
அடுத்த வீட்டில்..தீப்பிடித்தால்...
நெஞ்சம் குளிரும்...நல்லவர்களே.....
பக்கத்து வீட்டு ஜன்னலை..
எட்டிப் பார்க்கும் திறமைமிக்கவர்களே....
வருத்தம் வேண்டாம்...
சிபாரிசு செய்கிறேன்......உங்களுக்காக...
நோபல் பரிசு....வழங்கச்சொல்லி...
http://blog.tamilish.com/pakkam/5
Friday, August 3, 2012
மரணம்...இல்லா.மரணமே....
உனக்கு மரணம் இல்லையென்ற ஆணவமா.....
பிள்ளையின் அழுக்குரல்...உனக்கு இன்னிசையா???
மனைவின் கண்ணீர்...உனக்கு அமிர்தமா ????
தந்தையின் துக்கம்....உனக்கு ...ஆனந்த தாண்டவமா??
ஊராரின் கவலை..உனக்கு பொங்கல் திருநாளா???
இத்தனைப் பேரின் அழுகைக்கூட உனக்கு...
மரணத்தை தரவில்லை எனும்...தலைக்கணமா????
மரணம்...இல்லா.மரணமே....
கடுகளவேனும்....இரக்கம்காட்டு.....
உயிர்களுக்கு..உயிர் பிச்சைக்கொடு....
தாயைப் பிரியப் போகும் குழந்தைக்கும்....
கணவனைப் இழக்கப்போகும் மனைவிக்கும்.....
மகனை உனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் போகும்....அன்னைக்கும்....
கடுகளவேனும்..இரக்கம்காட்டு.....
உனக்கு கட்டளையிடவில்லை......மரணமே....
உன் காலடியில் மண்டியிடுகிறேன்......
மனமிறங்குவாயா...இந்த அபலைக்கு....
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, August 1, 2012
சுகமான நினைவுகள் அது....
உனது...மின்னஞ்சலுக்காக ஏங்கும் வேளையில்...
பழைய மின்னஞ்சலை.சற்றே கிளரி பார்த்தேன்....
நமது...உறவின் ஆழம் தெரிந்தது....
சுகமான நினைவுகள் அது...
இன்று சுமையாக மாறியது.உனக்கு..
அன்று அன்பான உன் வார்த்தைகள் இன்று அனலாகத் தெறிக்கிறதே
உன் காதல் பார்வை..இன்று காலியாக...இருக்கிறதே......
ஏங்குகிறேன்....உன் வருகைக்காக..
நேரில் ..இல்லாவிடினும்...
கனவிலாவது....தரிசனம்..தந்துவிடு.......
http://blog.tamilish.com/pakkam/5
Monday, July 30, 2012
வெறுப்பைக் கேட்டால்..எதை தருவாய்???
அன்பைக் கேட்டேன்...
அரவணைப்பைக் கேட்டேன்...
நெஞ்சில் மஞ்சம் கேட்டேன்..
மடியில் தூக்கம் கேட்டேன்...
என் விழியில் உன் உருவம் கேட்டேன்....
உன் நாவில் என் பெயர் சொல்லக் கேட்டேன்....
இதயம் கேட்டேன்...
அதில் கொஞ்சம்...இடம் கேட்டேன்....
முத்தம் கேட்டேன்...உன்னை மொத்தமாய் கேட்டேன்...
கூடல் கேட்டேன்..அதில் கொஞ்சம் ஊடல் கேட்டேன்...
எதைக் கேட்டாலும் வெறுப்பையே
பதிலாக தருகிறாயே...
வெறுப்பைக் கேட்டால்..எதை தருவாய்???
http://blog.tamilish.com/pakkam/5
Friday, July 27, 2012
அழுகிறேன்...யாருக்கும் தெரியாமல்...
அழுகிறேன்...யாருக்கும் தெரியாமல்...
பன்னிரெண்டு மாதங்கள் காத்துக்கிடந்தேன்...
உனக்காக.....
போதும் என நிறுத்தினாய்...
போ என்று விரட்டினாய்...
நாய்க்குக் கூட மரியாதை உண்டு இவ்வுலகிலே...
அதையும் விட கேவலமாய் ஆனேன்....உன் மனதிலே....
கவலையில் அமர்ந்திருந்தேன்...ஆறுதல் சொல்லவில்லை நீ...
கண்களில் தேங்கிய நீரை துடைக்க வர வில்லை....நீ...
கோபத்தீயை அணைக்க வரவில்லை நீ
ஆனால்..கூறினாய்...உள்ளம் உடைய...ஒரு சொல்...
உயிர் வலிக்க ஒரு சொல்...
"போ" என்ற மரணச்சொல்....
இந்நொடியும் கூட அழுகிறேன்.....யாருக்கும் தெரியாமல்......
http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, July 11, 2012
"சீ" என்ற சிணுங்கள்
எது பகல்..எது இரவு...
எனத் தெரியாமல் கிடந்தோம்...
முத்தங்களை என் முகமெங்கும் பொழிந்தாய்..
"சீ" ....சிணுங்கினேன்..நான்..
காதலுக்கு அழைப்பிதலே.."சீ" என்ற சிணுங்கள்தானே...
என் இதழ்களில்..மதுரசம் குடித்தாய்..
தலைக்கீழாய் பூத்த தாமரைகளைப் பறித்தாய்...
இது போதும் என நான் விலக...
போதும் என்றாலே...
காதலர்கள் மொழியில் போதவில்லை என்றுதானே..அர்த்தம்..
எறும்புக்கு உணவாய்...கரும்பு தோட்டமே..வந்தது....
பிறகென்ன...
எறும்பு....கரும்பை சுவைத்தது..................
http://blog.tamilish.com/pakkam/5
Monday, July 9, 2012
பன்னிரெண்டு மணி கடிகாரமாய்....
இனியவனே......
உன்னோடு..இருந்த அந்த நாட்களை....மறக்க முயல்கிறேன்....
என்னையே நான் ஏமாற்றிக் கொள்றேனா???
அவ்வினிய நினைவுகள்...பனிமூட்டங்கள் நிறைந்த பாதையாய் ..
என் நெஞ்சில்......
வியர்வை முத்துகளை இதழ்களால்...துடைத்தாய்...
உன் நகம் பட்டு ..என் மேனியில் விழுந்த
கீரல்களை...கணக்கெடுத்தாய்...
என்னைப் பேசவிடாது...என் இதழை..
ஆட்கொண்டாய்....
உன் மார்பில் நான் தலைச்சாய்க்க....கூந்தலை
கோதி விட்டாய்.....
வரம் ஒன்று கேட்கிறேன்..தருவாயா???
பன்னிரெண்டு மணி கடிகாரமாய்....
இருவரும்....இருக்க வேண்டும்...........
http://blog.tamilish.com/pakkam/5
Monday, July 2, 2012
அது நட்பல்ல.....உலக மகாநடிப்பு....
சுய நலம்...உறவை கெடுக்கிறது....
சுய நலம் ...நட்பை. சிதைக்கிறது....
நன்றியை மறக்கும்....நட்பு....
அது நட்பல்ல.....உலக மகாநடிப்பு....
நாயும் கூட காரி உமிழும்......உன் முகத்தில்....
நன்றி கெட்ட நண்பனே என்று.....
நன்றி கெட்ட நாயே என்று உன்னை சொல்ல மாட்டேன்....
நாயோடு உன்னை ஒப்பிட்டால்.....நாயும் கூட தற்கொலைச் செய்து கொள்ளும்....
உன்னுடன் பழகிய ...அந்த கருப்பு நாட்களை மறக்க முயல்கிறேன்.....
உன்னை வெறுக்க முயல்கிறேன்.....
முடியுமா என்று தெரியவில்லை......
ஏனெனில் ..என் நட்பு உண்மையானது.......
என் உள்ளமெனும் தோட்டத்தில்....பூத்திருந்த நட்பெனும்....
அழகிய மலர்களை...வேரோடு பிடுங்கி எடுக்க
எப்படி உன்னால் முடிந்தது.....
காலனும் கூட சற்று சிந்திப்பானே......
நீ...அவனினும்....கொடியவளா......???
http://blog.tamilish.com/pakkam/5
Thursday, June 28, 2012
கல்லறை சேரும் முன் சந்திப்போமா....
என் நண்பனே....
இன்பத்திலும் துன்பத்திலும் பங்குக் கொண்ட தூயவனே...
நாம் பிரியும் வேளை தூரம் இல்லை..
உடல் பிரிந்தாலும் உள்ளம் பிரியாது..
உயிர் பிரிந்தாலும் உன் நினைவுகள் மறையாது....
தடுக்கி விழும் போது எனை தாங்கிப் பிடித்தாய்..
தடுக்கி விழாது எனைப் பாதுகாத்தாய்..
நாளை முதல் யார் வருவார்....எனை ஏந்திக் கொள்ள
என் நிழலே.. நீ இல்லாமல் போனால்..
என் நிலைமை என்ன....
எரிமலைக்குள் சிக்கிக் கொண்ட வண்ணத்துப்பூச்சி போலே..
ஆழி பேரலையில் தவிக்கும் மீன்குஞ்சி போலே...
புயல் காற்றில் மாட்டிக் கொண்ட சிட்டுக் குருவி போலே.....
இருக்கிறேன் நான்...
மீண்டு வர முடியாமல் தவிக்கிறேன். நான்...
என்று சந்திப்போம்....
எங்கு சந்திப்போம்...
எப்படி சந்திப்போம்....
என ஏங்குது என் ஆவி...
கல்லறை சேரும் முன் சந்திப்போமா.....
இல்லை தடம் இல்லாமல் மறைவோமா....?????
http://blog.tamilish.com/pakkam/5
Sunday, May 27, 2012
நினைவுகள்
விலகி நின்றேன் உன் நினைவுகளிலிருந்து....
நீயோ..நெருங்கி வந்தாய் நினைவுக்குள்ளே
நெருங்கி வந்தேன்....உன்னை அள்ளி அணைக்க...
உதறி சென்றாய் ...என் நெஞ்சம் வலிக்க...
காத்துக் கிடக்கிறேன் உன் காதலுக்காக....
மீண்டும் வருவாயா...என்னை தாங்கிப் பிடிக்க....
இமைக் கூட..இமைக்க மறக்கும்....
என் மின் அஞ்சலை திறக்க மறப்பதில்லை...
உன் மனதைப் போல்....அதுவும் காலியாகவே..இருக்கிறது...
என் நினைவுகள் இல்லாமல்......
http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, May 22, 2012
ச்ச்சீசீ........என்ன உலகமடா....இது....
ச்ச்சீசீ........என்ன உலகமடா ....இது....
சுய நல ஓநாய்கள் சுற்றி திரியும்.... உலகம்.....
தன்னலம் கருதும்...பேய்கள் வாழும் உலகம்.....
நட்பெனும் போர்வையில்..மறைந்து கிடக்கும்....
மலைப்பாம்புகள் நிறைந்த உலகம்...
இனிப்பாய் பேசி.....கசப்பைக்..கக்கும்...
சூனியமான உலகம்.....
பொய்யாய் சிரித்து..விஷத்தை உமிழும்..
காட்டேரிகள் வாழும் உலகம்......
http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, April 10, 2012
ஐந்து நிமிடம்....
ஐந்து நிமிடங்கள்....போதும் எனக்கு..
உன்னோடு நான் வாழ்ந்த அந்த ஐந்து நிமிடங்கள்..
போதும் எனக்கு...
வாழ்வின் எல்லை வரை...கடைசி மூச்சு வரை...
போதும் எனக்கு....
இரண்டு நிமிட அணைப்பு...
இரண்டு நிமிட முத்தம்...
ஒரே ஒரு நிமிட.....கூடல்...
இது போதும் எனக்கு...
உனக்காக என்னையே தரும் எனக்கு
தருவாயா?????
இன்னுமொரு...ஐந்து நிமிடம்.... http://blog.tamilish.com/pakkam/5
Thursday, March 22, 2012
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல
Wednesday, March 21, 2012
இகழ்ந்தாலும் கவிகளுக்குப் புகழாரமே...
எல்லார்க்கும் எல்லாமே பிடித்து விட்டால்....
சுவாரஸ்யம் இல்லையடா....
அன்னம் உனக்கு காகமாய் தெரிந்தால்
நான் என்செய்வேனடா...
இகழ்ந்தாலும் கவிகளுக்குப் புகழாரமே...
மட மனிதர்க்கு புரியவில்லையடா.....
புகழ்ந்தற்கு நன்றி சொல்வேன்....
கோடான கோடி நன்றியடா...
புதுக்கவிதைக்குத் தேவையில்லை இலக்கணமடா....
புதுக்கவிஞர்கள் கூறிய போது.... செவிடனாய் போனாயடா....
உரைவீச்சு.....உள்ளத்தின் குமுறலடா...
இதில் இலக்கணம் தேடுபவர்.....கிறுக்கனடா..!!!!!!! http://blog.tamilish.com/pakkam/5
Tuesday, March 20, 2012
என் சுவாசமே....
என் சுவாசமே.....என் உடல் எனும் வீணையில்...
உன் விரல்கள் இசை மீட்டாதா....
ஆனந்த பைரவியை மீட்டுவாய்..என எதிர்பார்த்த நேரத்தில்....
முகாரியை மீட்டிவிட்டாயே....
என் மனம்....அழும் ஒசை உன் காதில்...விழ வில்லையா....???
உன் காலடி ஓசையே....எனக்கு காலை அலாரம்...
உன் சிரிப்பொலியே..எனக்கு மதிய உணவு...
உன் இதழ் சிந்தும் வார்த்தைகளே....எனக்கு தாலாட்டு....
உன் வாய்மொழியே....எனக்கு அமுத மொழி....
மெய்யான நம் உறவில்...பொய் எதற்கு....
உன்னுடைய உண்மையான அன்பை ..
ஒரெ ஒரு பொய்....கலங்கம் செய்து விட்டதே.....
பொய் வேண்டாம் அன்பே.....உண்மையான நம் உன்னத உறவில்..... http://blog.tamilish.com/pakkam/5
Thursday, February 23, 2012
நட்பு.......
மூன்றெழுத்து மந்திரம்...அது முடிவில்லா சமுத்திரம்...
ஒரே கருவறையில் இருக்க வில்லை..நீயும் நானும்..
ஆனால்,
அவரவர் இதய அறையில் இருக்கிறோமே ..
இது என்ன அதிசயம்...
என்னவன் பார்த்த முதல் பார்வைக் கூட
மறந்து போனதே...
என் உயிரே..உனது பார்வை என் இதயத்தில் இனிக்கிறதே....
நட்பின் தாய்மொழியே.....
கல்லறை சேர்ந்தாலும்...உயர்ந்து கொண்டே போகும்..
தமிழ்மொழிப் போல்...நமது நட்பு....... http://blog.tamilish.com/pakkam/5
Wednesday, February 22, 2012
தரிசனம் தருவயா ???
Monday, February 20, 2012
காதல் எனப் பெயர் சூட்டவா....
என்னவனே..உனது மாயப் பார்வையின் அர்த்தம் என்ன....???
இருவிழி கொண்டு என் இதயத்தை அபக்கறிக்கிறாயே....
உனது கண்களுக்குக் கள்வன் எனப் பெயர் சூட்டவா.....
இரு கரங்களைக் கொண்டு என்னை ஆட்பறிக்கிறாயே...
உன் கைகளுக்கு அரக்கன் எனப் பெயர் சூட்டவா....
உயிரோடு என்னை உன் அரவணைப்பில் புதைக்கிறாயே...
உன் அன்பிற்குக் காதல் எனப் பெயர் சூட்டவா.....
உன் அரவணைப்பில்...திணருகிறேன்...
உன் அன்பில்...திகைக்கிறேன்...
உன் காதலுக்காக...தவிக்கிறேன்.... http://blog.tamilish.com/pakkam/5
Sunday, February 19, 2012
என் நண்பனே......
உள்ளம் உருக பழகினேன்...உயிர் உருக பழகினேன்...
அவன் காலில் முள் குத்தினால்..என் கண்ணில் நீர் வழிந்ததே...
ஆனால்...என் நெஞ்சில் முள் தைத்து ...
காணாமல் போனானே....
வார்த்தைகளால் அல்ல....வெறும் உதடுகளால் அல்ல...
உள்ளத்தால் பழகினேன்..உயிரால் பழகினேன்....
கல்லால் அடித்தாலும் தாங்கியிருப்பேன்...நண்பனே...
சொல்லால் அடித்தாயே.....
வானத்தின் நிறம் கருப்பு என்றும்....
காகத்தின் நிறம் வெள்ளை என்றும்....
நீ சொன்னால் நம்பினேனே....
உன் இதயத்தின் நிறந்த்தை மட்டும் நான் அறிய தவறினேனே.....
உறவில் நம்பிக்கையில்லாமல்..உன் நட்பில் நம்பிக்கை வைத்தேனே.....
என் மேல் தீயெறிந்து சென்றதேனோ....
என் நண்பனே...... http://blog.tamilish.com/pakkam/5
Thursday, February 16, 2012
என்னை ஆள்பவன்....
Subscribe to:
Posts (Atom)