Thursday, August 30, 2012

தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை....

தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை.... தொந்தரவு செய்கிறேன்..தோழிகளை என்னுடன் பேச சொல்லி... தொடர்பு இல்லாத நண்பர்களைக்கூட அழைக்கிறேன்...தொலைபேசியில்... வன்முறையானப் படங்களைப் பார்க்கிறேன்... நகைச்சுவை துணுக்குகளைத் தேடி அலைகிறேன்... காதல் காட்சிகளை மட்டும் வேண்டாமென மறுக்கிறேன்... காதல் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல... உன் ஞாபகம் என்னுள் வரக்கூடாது என்பதற்காக.... உன் நிழல் படும் இடத்திற்குக்கூட வர தயங்குகிறேன்.... உன் சுவடு என்னை பாதிக்குமோ என்று.... எண்ண அலைகள்.... எனக்குள் தேங்கி வழியும்.. உன் நினைவலைகள்..... அனுதினமும்.....மோதி மோதி காயம் செய்கிறது...மனதை.... அதனால்தான் ..தவிர்க்கிறேன்....தனிமையாய் இருப்பதை..... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment