Monday, July 30, 2012

வெறுப்பைக் கேட்டால்..எதை தருவாய்???

அன்பைக் கேட்டேன்... அரவணைப்பைக் கேட்டேன்... நெஞ்சில் மஞ்சம் கேட்டேன்.. மடியில் தூக்கம் கேட்டேன்... என் விழியில் உன் உருவம் கேட்டேன்.... உன் நாவில் என் பெயர் சொல்லக் கேட்டேன்.... இதயம் கேட்டேன்... அதில் கொஞ்சம்...இடம் கேட்டேன்.... முத்தம் கேட்டேன்...உன்னை மொத்தமாய் கேட்டேன்... கூடல் கேட்டேன்..அதில் கொஞ்சம் ஊடல் கேட்டேன்... எதைக் கேட்டாலும் வெறுப்பையே பதிலாக தருகிறாயே... வெறுப்பைக் கேட்டால்..எதை தருவாய்??? http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment