Monday, September 10, 2012

சேரன்...மறவன்....

தலைக்குனியா மன்னனவன்... தலைக்கு மேல் தூக்கிதான் கொஞ்சுவான்... தான் பெற்ற பிள்ளையைக்கூட... கரம் பிடித்தவளின் இதழில் இதழ் பதித்தால்... குனியக்கூடுமே என்று... நெற்றியில் முத்தமிடும்....அரசனவன்.. வளையாத முதுகெலும்பு படைத்தவனோ... என்று ஆச்சரியமுற்றவர் பலர்.... தொண்டி துறைமுகத்தை ஆண்ட தலைவனவன்... மூவன் எனும் வேந்தனை வீழ்த்தி... அவன் பற்களைக் கோட்டை வாயில் கதவில் தொங்க விட்ட வீரனவன்.....சேரனவன்... பார் எங்கும் புலிக்கொடியைப் பறக்க விட்ட சோழத்திருமகனைத் தோற்கடிக்க படைத்திரட்டினான்...போர்தொடுத்தான்.... ஒலியைக் கிழிக்கும் ஒளியாய் கிளம்பினான்.... வெற்றி யாருக்கு...தோல்வி யாருக்கு என கணிக்க முடியாத போர்களமாய்..இருந்தது.... வெற்றித் திருமகளோ....சோழனின் பக்கம் சாய்ந்தாள்... ஆற்றல் முழுவதும் காட்டியும்... சேரனவன் சிக்கிவிட்டான்...புலிக்கொடி வேந்தனிடம்... சிறையில் சேரனோ...அணு அணுவாய் சிதைந்து போனான்...தோல்வியின்...வலியால்.... தாகம் எடுக்க....ஒரு நாள்.... தண்ணீர் கேட்டான் சேரன்... காவலாளி தாமதித்த காரணத்தினாலே..... கோபம் கொண்ட அப்பெருந்தலைவன்.... எதிரியின் சிறையில்...நாய் போன்று வாழ்வது இழிவு.... உயிரை விட்டொழிப்பதே...சிறப்பு.. என....கடைசி மூச்சை ..காற்றோடு கலந்து விட்டான்... இப்படி..சேரனின் புகழ் பாடுகின்றார் "சேரமான் கணைக்கால் இரும்பொறை. (புறநானூறு : பாடல் 74) http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment