Wednesday, October 3, 2012

வாழ்க பல்லாண்டு......

இன்றும் இனிக்குதடா என் நினைவில்... உன்னை என் வயிறு சுமந்த தருணங்கள்... கருப்பையில் மிதந்து கொண்டே.. உன் கால்களால் நீ எத்திய சுகம்... இன்றும் இனிக்குதடா என் நினைவில்... உலகத்தை நீ எட்டிப்பார்த்த நேரம்... உன்னை நான் பிரசவித்த நேரம்... தெவிட்டாத அடிக்கரும்பாய்.. இன்றும் இனிக்குதடா என் நினைவில்... உன்னை புறந்தள்ள நான் பட்ட இடுப்புவலி.. அது இடுப்புவலி அல்ல... என் பெண்மையைப் பரிப்பூரணமாக்கிய உண்ணதமான வலி... வருடங்கள் ஐந்து ஆகிவிட்டது நீ பிறந்து.. ஆனால்...உன்னை சுமந்த சுகமான நினைவுகள் இன்றும் இனிக்குதடா என் நினைவில்... வாழ்த்துகிறேன்...என்னவனே.. வாழ்த்துகிறேன்...தூயவனே... வாழ்த்துகிறேன்...என் பிம்பமே.. வாழ்த்துகிறேன்...என் உயிரே... இந்த இனிய நாளில்...உன் பிறந்த நாளில்... உன் கலைகள் சிறக்க...இந்தப் புவி மணக்க வாழ்க பல்லாண்டு...... http://blog.tamilish.com/pakkam/5

2 comments:

  1. இனியவளே, உன் இனிமையான நினைவுகளை மீண்டும் அணுபவிக்க என் வாழ்த்துகள்.

    ReplyDelete