Friday, August 3, 2012

மரணம்...இல்லா.மரணமே....

உனக்கு மரணம் இல்லையென்ற ஆணவமா..... பிள்ளையின் அழுக்குரல்...உனக்கு இன்னிசையா??? மனைவின் கண்ணீர்...உனக்கு அமிர்தமா ???? தந்தையின் துக்கம்....உனக்கு ...ஆனந்த தாண்டவமா?? ஊராரின் கவலை..உனக்கு பொங்கல் திருநாளா??? இத்தனைப் பேரின் அழுகைக்கூட உனக்கு... மரணத்தை தரவில்லை எனும்...தலைக்கணமா???? மரணம்...இல்லா.மரணமே.... கடுகளவேனும்....இரக்கம்காட்டு..... உயிர்களுக்கு..உயிர் பிச்சைக்கொடு.... தாயைப் பிரியப் போகும் குழந்தைக்கும்.... கணவனைப் இழக்கப்போகும் மனைவிக்கும்..... மகனை உனக்கு தாரைவார்த்துக் கொடுக்கப் போகும்....அன்னைக்கும்.... கடுகளவேனும்..இரக்கம்காட்டு..... உனக்கு கட்டளையிடவில்லை......மரணமே.... உன் காலடியில் மண்டியிடுகிறேன்...... மனமிறங்குவாயா...இந்த அபலைக்கு.... http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment