Thursday, June 28, 2012

கல்லறை சேரும் முன் சந்திப்போமா....

என் நண்பனே.... இன்பத்திலும் துன்பத்திலும் பங்குக் கொண்ட தூயவனே... நாம் பிரியும் வேளை தூரம் இல்லை.. உடல் பிரிந்தாலும் உள்ளம் பிரியாது.. உயிர் பிரிந்தாலும் உன் நினைவுகள் மறையாது.... தடுக்கி விழும் போது எனை தாங்கிப் பிடித்தாய்.. தடுக்கி விழாது எனைப் பாதுகாத்தாய்.. நாளை முதல் யார் வருவார்....எனை ஏந்திக் கொள்ள என் நிழலே.. நீ இல்லாமல் போனால்.. என் நிலைமை என்ன.... எரிமலைக்குள் சிக்கிக் கொண்ட வண்ணத்துப்பூச்சி போலே.. ஆழி பேரலையில் தவிக்கும் மீன்குஞ்சி போலே... புயல் காற்றில் மாட்டிக் கொண்ட சிட்டுக் குருவி போலே..... இருக்கிறேன் நான்... மீண்டு வர முடியாமல் தவிக்கிறேன். நான்... என்று சந்திப்போம்.... எங்கு சந்திப்போம்... எப்படி சந்திப்போம்.... என ஏங்குது என் ஆவி... கல்லறை சேரும் முன் சந்திப்போமா..... இல்லை தடம் இல்லாமல் மறைவோமா....????? http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment