Sunday, September 2, 2012

சொர்க வாசல் திறக்குமா????

இயற்கை அழகிற்கும் வளத்திற்கும் பஞ்சமில்லாத ஊர். அழகில் மட்டுமா, இனத்தையும் உரிமையையும் காக்க உயிரையே தியாகம் செய்யத் துணியும் மறத்தமிழர்கள் வாழும் ஊர். இவை அனைத்தும் இருந்தும் சுதந்திரம் இல்லை. சொந்த மண்ணிலே அகதிகளைப் போலவும் திருடர்களைப் போலவும் பயந்தும் மறைந்தும் வாழ வேண்டிய சூழ்நிலை. என்ன கொடுமையடா இது. மக்கள் படும் இன்னல்களுக்கு மருந்தாக பிறந்தவந்தான் கனலன். சிறுவயது முதலே கொடுமையையும் வறுமையையும் சித்ரவதையையும் பார்த்து அனுபவித்து , பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா" என கூக்குரலிட்டு தனது மக்களுக்காக உயிரையும் துச்சமென நினைத்தவன் கனலன். தன்னுடன் தம்மைப் போல வீர நெஞ்சம் படைத்த நண்பர்களுடன் ஒன்றிணைந்து தமதுரிமையை நிலைநாட்ட உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இராணுவப்படையை உருவாக்கியவன் கனலன். ஒவ்வொரு நாளும் மேகங்கள் உருவாகிக் களைவது போல ஒவ்வொரு தலைவர்களும் கனலனின் படையை வீழ்த்த முயன்றனர். ஆனால் சிங்கத்தை வீழ்த்த செந்நாயால் முடியுமா? வேண்டமடா இந்த விஷப்பரிட்சை என்று அஞ்சி ஓடி விட்டார்கள். ஆனால் மனித இதயமே இல்லாத கொடூரமான நயவஞ்சகன் ஆட்சிக்கு வந்தான். மனித ரூபத்தில் நடமாடும் அரக்கன் அவன். நேர்வழியில் போராட துணிவில்லமால் முதுகில் குத்திய கோழை. அவன் தான் நண்டிமித்ரா. இந்த பாதகனால் மக்கள் படும் அவஸ்தையும் படுகின்ற இன்னல்களும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை. பச்சிளங்குழந்தைகள் முதல் பண்பட்ட முதியோர்கள் வரை இவன் அதிகார ஆட்சியினால் ஆயிரம் ஆயிரமாய் செத்து மடிந்தனர். பள்ளி சிறுவர்கள் கூட புதரிலும் குழியிலும் ஒளிந்து கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. எந்நேரத்தில் குண்டு மழை பெய்யும் என்ற ஐயம் நேற்று பிறந்த குழந்தையின் மனதைக் கூட ஆட்கொண்டது. நிறைமாத கற்பிணிகளுக்குகூட தயவு காட்டாத கேவலமானவன் அவன். கன்னிப் பெண்கள் கற்பை சூரையாடும் அற்பப்புத்திக் கொண்டவன். கனலனோ எந்த எதிர்ப்பு வந்தாலும் தன் படைகளுடன் மக்களின் நலனுக்காக போராடி வந்தான். மக்கள் கனலனைத் தன் இதயக் கோவிலின் வைத்து போற்றினார்கள். தங்களைக் காக்க கனலன் இருக்கிறான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு நாட்களைக் கடத்தினார்கள். நண்டிமித்ராவின் இரக்கமற்ற இராணுவத்திற்கும் நேர்வழி மட்டுமே தெரிந்த கனலனின் இராணுவத்திற்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. மக்களை மட்டும் குறிவைத்து நகர்ந்தது நண்டிமித்ராவின் இராணுவம். நாளுக்குநாள் மக்கல் ஆயிரங்கணக்கில் செத்து மடிந்தனர். மக்களின் இறப்பு எண்ணிக்கை உயர உயர நண்டிமித்ராவின் ஆணவமும் ஆனந்தமும் பல்மடங்காயின. உலக நாடுகளின் கூக்குரலுக்குச் செவிச்சாய்க்காமல் செருக்குப் பிடித்த மத யானையைப் போல் திரிந்தனர் நண்டிமித்ராவின் படைவீரர்கள்.காட்டிக்கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவும் பிறந்த சில ஈனப்பிறவிகளால் சற்றே சரிவு கண்டது கனலனின் படை. இறுதியில் சிங்கத்தைச் சாய்த்து விட்டோன் என்று ஒநாய்கள் போல் ஓலமிட்டனர். அறிவில்லாதவர்கள் அவர்கள். சுட்டெறிக்கும் சூரியனைச் சுண்டு விரலால் சுழற்ற முடியுமா? சீறி வரும் சிறுத்தையை சிறைப்பிடிக்கலாகுமா? கனலன் எரிமலைப் போன்றவன். அவனை அடக்க யாரால் முடியும். எத்தனை முறை காயப்பட்டாலும் , மக்கள் சஞ்சீவி வேர்களாய் மாறி அவன் காயத்தை ஆற்றுவார்கள். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது வந்து நம்மையும் நம் இனத்தையும் காப்பாற்றி சொர்க வாசலை திறந்து வைப்பான என மக்கள் நம்பிகின்றனர். நானும் நம்புகிறேன். http://blog.tamilish.com/pakkam/5

4 comments:

  1. good. keep it up.......

    ReplyDelete
  2. பொங்கும் உணார்ச்சிகளை அடக்கி வைப்பதே நமது இனம்..பெண் இனம்.
    நீயும் உன் உணர்ச்சிகளை அடக்கி வைத்தால்..கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சும்

    ReplyDelete
  3. anonymous தோழியே..உங்களுக்கான பதில் புதிய பதிவில் இருக்கிறது பாருங்கள்...

    ReplyDelete