Wednesday, September 12, 2012

நாளையே திருமணம்

"காத்திருந்தாள்.... தன் காதலன் வருகைக்காக.. மணல் மேலே படுத்து...வானத்தைப் பார்த்து..." "காதலனும் வந்தான்... அவன் மடியில் சாய்ந்தாள்... தழுவினர்...மகிழ்ந்தனர்....." கண்ணீர்..அவள் கண்ணில்.... ஏன் என்றான் காதலன்..." "தழுவுதல்...மகிழ்தல்.. எல்லாம் சரிதான்... திருமணம் எப்போது என்றாள்" "விரைவில் உன்னைக் கரம் பிடிப்பேன் , ஆனால்.. அதற்கு முன் இவ்வுலகின் துன்பப்பகுதியை மறந்து இருவரும் இன்பக்கனியில் திளைத்திடுவோம்... காதல் எல்லை எதுவரை என்று கண்டறிவோம் என்றான்" அவளை அணைத்தான்.. திடீரென்று... நில்லுங்கள்...என்ற குரலொலி திரும்பிப் பார்த்தான்... காதலியின் தோழி அவன் முன்... தோழி கூறினாள்.... " காதல் லீலை புரிபவரே... குறை ஏதும் இல்லை உன் அன்பில் ஆனால், நீண்டக்காலம் காதல் செய்யவோ இப்பெண்ணின் பெற்றோர் விரும்ப மாட்டார்கள்... தள்ளி போடாதீர் மணவிழாவை... வயதான கொக்கும் கூட கொத்திப் போகும் இக்கன்னி மீனை..."என்றாள்.. "அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க... வயோதிகன் எவனும் இவளை மணக்காமல் இருக்க..சூட்டி விடு மணமாலையை...." என்றாள் " என் இதய அறையில் இருக்கும் பூவை கிழத்தேனிக்கு இரையாக்க மாட்டேன். " என்றான் கண்ணாளன்... என்று மிக அழகாகப் பாடியுள்ளார் அம்மூவனார் ஐங்குறுநூறு பாடலில்.. பாடல்(180) http://blog.tamilish.com/pakkam/5

No comments:

Post a Comment