Tuesday, December 14, 2010

கிறுக்கல் 3


ஜாதி...மதம்.....இனம்.....

இவற்றை தாண்டி வருவதும் மட்டுமல்ல காதல்.....

நாடு...மொழி...இவற்றுக்கும் அப்பாற்பட்டு வருவதே காதல்..........

பல்லாயிரம் மயில் கல் தாண்டிடிருந்தாலும்...

உன் சுவாசக்காற்று என் காதோரம் மெல்லிசைப் பாடும்

அதிசயம்தான் என்னவோ.....

உனது தாய்மொழியை நான் கற்பதற்குள்..

எனது தாய்மொழியை...நீ காதலித்து விட்டாயே.......

உன் அன்பெனும் தீயில் ..

நான் கரைகிறேன்.....உறைகிறேன்.....

சிலிர்க்கிறேன்......முழுதாய் மயங்குகிறேன்..............

கண்ணாளனே.........

http://blog.tamilish.com/pakkam/5

Monday, August 23, 2010

கிறுக்கல்


பூந்தோட்ட வாசலில் ஒருவன் கேட்டான்...காதல் நோய்க்கு மருந்து என்னவென்று ..
திருமணம் என்றான் அங்கொருவன்...
இனி...வாழ்க்கையில் காதலிக்கவே மாட்டாய் என்ற குரல் கேட்டது.....
சவக்குழியிலிருந்து !!!!!!!!! http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, August 3, 2010

வரம் தருவாயா????


வெறுமையாய் இருக்கும் எனது வாழ்வை
காதலால் நிரப்ப வந்தவனே....
கருப்பாய் இருக்கும் எனது கனவுகளுக்கு
நிறமாய் வந்தவனே...
உதிரத்தில் கலந்தவனே....உயிராய் மலர்ந்தவனே...
கடைசி மூச்சு வரை..என்னுடன் இருப்பாயா...???
இல்லாவிடில்...நமது அன்பின் அடையாளமாக
எனக்கு ஒரு வரம் கொடு....
உயிருள்ள வரம்...உணர்வுள்ள வரம்...
என் வயிறு சுமக்கும் வரம்...
என்னை அம்மா..என்று அழைக்கும் வரம்..... http://blog.tamilish.com/pakkam/5

Monday, August 2, 2010

கிறுக்கல்


அன்பு நெஞ்சங்கள் அருகில் இருந்தால் என்ன...
தொலைவில் இருந்தால் என்ன....
தொலையாத நினைவுகள் உள்ள வரை...
தொலைவும் வெகு அருகில்தான்...... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, July 14, 2010

கிறுக்கல்


நரகத்தின் வாசலில் நின்றுக் கேட்டேன்...
கொடுமையான தண்டனை எதுவென்று....
அங்கு ஒருவன்......."தனிமை" என்றான்..... http://blog.tamilish.com/pakkam/5

Friday, July 9, 2010

நட்பு....


எங்கோ பிறந்து..எங்கோ வளர்ந்த ..
இரு உயிர்கள் சேர்வதே நட்பு....
காலங்கள் மாறும் ..காலம் தந்த கனவுகள் மாறும்...
மாறாமல் இருப்பது நட்பு....
உறவுகள் தூக்கி எரியும் போது...
தோள் கொடுப்பது நட்பு....
சமுதாயம் ஒதுக்கும் போது...
அரவணைப்பது நட்பு....
சுற்றம்!!!பணம் இருக்கும் வரை....
தொப்புள் கொடி உறவு!!!!தனக்கு துணைக் கிடைக்கும் வரை....
திருமண உறவு!!!!விட்டுக்கொடுக்கும் வரை.....
நண்பன் மட்டுமே!!!!!நமது கடைசி மணித்துளிகள் வரை......
நட்பு......உரிமையானது...உண்மையானது..... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, July 7, 2010

ஆசை......


பௌர்ணமி இரவில் கடற்கரையோரம்....இருவரும் கைகோர்த்து நடக்க வேண்டும்.....
ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து..கதைகள் பல பேச வேண்டும்....
மெல்லிய காற்றால் உடல் கூச....உன் மார்பில் நான் புதைய வேண்டும்.....
என் கூந்தலை நீ கோதி விட்டு....நான் உறங்க நீ பாட வேண்டும்.....
இரவு நம்மை ஆட்கொள்ள நம் இதழ்கள் போரிட வேண்டும்.....
வென்றது யாரென்று உதட்டின் காயங்கள் பதிலளிக்க வேண்டும்......
யார் இந்த காதலர்கள் என நட்சத்திரங்கள்....திகைக்க வேண்டும்......
நமது மோகத் தீயை கடல் அலைகள் வந்து அணைக்க வேண்டும்....
கடலலை அணைத்தாலும் அணையாது நமது காதல்....
தீயில் போட்டு எரித்தாலும்...தீராது எந்தன் காதல்....... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, July 4, 2010

எப்போது.?????


இமைகள் ரெண்டும் மூடினால் உன் முகம் தெரிகிறதே.....
என் இதய வாசலிலும் உன் கால் தடம் இருக்கிறதே.....
நீ கொடுத்த முதல் முத்தம்...இன்னும் என் இதழ்களில் இனிக்கிறதே.....
நீ பார்த்த முதல் பார்வை என் நெஞ்சுக்குள் வாழ்கிறதே.....
என்னைத் திருடிய கள்வனே.....உன் மடி சாய்வது எப்போது..?
உன் நினைவுகள் என்னை கொல்கிறதே....
இது எனக்கு மட்டும் உண்டான வலியா......
உன் நினைவுகளில் என் நிழல் தெரிகிறதா...?????
உன்னை நினைத்து உருகுது என் ஆவி.......
உன் முகம் பார்க்க ஏங்குது என் ஜீவன்......
இனிய கனவுகள் தந்து என் உறக்கத்தைக் கெடுத்தவனே.......
என் வலிகளுக்கு மருந்தாகப்போவது எப்போது.?????
வா....என் உயிர் புகுந்து எனை உறைய செய்...
உன் அன்பால் எனைக் கரைய செய்.....
கட்டியணைத்து எனைக் கலங்க செய்.....
உன் காதலுக்காக ஏங்குகிறேன்.....இதை காமம் என்று எண்ணி விட்டதே...
காமம்.....வெறும் சுகத்தை எதிர்ப்பார்ப்பது...
எனது காதல் உன் அளவிலா அன்பை எதிர்ப்பார்ப்பது.......
அறிந்து கொள்...என் மனதை புரிந்து கொள்........ http://blog.tamilish.com/pakkam/5

Thursday, July 1, 2010

மன்னிக்கவும்......


கோபத்தால் அறிவிழந்து விட்டேன்....
பலர் மனதை ரணமாக்கி விட்டேன்....
கெட்டவள் எனும் பெயர் வாங்கி விட்டேன்....
பகைவர்களையும் நான் சேர்த்துக் கொண்டேன்....

கோபம் வேண்டாம் என்று அப்பா சொல்லியும்
அமைதியாய் இரு என்று அம்மா சொல்லியும்
பேதை மனம் கேட்கவில்லை.....
இந்தப் பிஞ்சு மனம் மாறவில்லை...

அறிந்தொன்றும் நான் செய்யவில்லை
அறியாமல் செய்தேன் இந்தப் பிழை...
நல்லதை நினைத்து..கெட்டதை மறந்து....
மன்னிக்கக் கூடாதா????
மங்கையை மன்னிக்கக் கூடாதா????
பெரியவென்றும் சிறியவென்றும் பாகுப்பாடு பாராமல்
வார்த்தைகளால் சுட்டெறித்து விட்டேன்.....
எனைப் பொறுத்தருள கூடாதா??? http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, June 29, 2010

தேடுகிறேன்........


காற்றில் உனது மூச்சுக்காற்றை தேடினேன்....கிடைக்கவில்லை....
அருவியில் உனது உடல் நனைத்த நீர்த் துளிகளைத் தேடினேன்....கிடைக்கவில்லை....
உன் விரல் தொட்டப் பூக்களில் உன் ஸ்பரிசத்தைத் தேடினேன்....கிடைக்கவில்லை.....
நீ வரைந்த ஓவியத்தில் எனது சாயலை தேடினேன் ...கிடைக்கவில்லை.....
உன் கண்களில் என் பிம்பத்தைத் தேடினேன்...கிடைக்கவில்லை.....
ஆனால்.......
உன் உதடுகளில் என் உயிரை தேடினேன்.....கிடைத்தது.....
உன் இதயத்தில் என் இதயத்தைத் தேடினேன் கிடைத்தது.....
உனது வார்த்தையில் எனது பெயரைத் தேடினேன் கிடைத்தது........
உனது அன்பில் எனது காதலை தேடினேன் கிடைத்தது......
என்னை ஆள்பவனே.......உன் வாழ்வில் என் மரணத்தை தேடுகிறேன்.....
கிடைக்குமா????? http://blog.tamilish.com/pakkam/5

Monday, June 28, 2010

என்னைக் காண்கிறேன்....


என் பிம்பமே......உன் தாமரைக் கண்ணில் என்னை காண்கிறேன்.....
என் வயிறு சுமந்த நிலவே....உன் செய்கையில் என்னைக் காண்கிறேன்....
என் நாயகனே ....உன் மழலைப் பேச்சில் என்னைக் காண்கிறேன்.....
என் செல்வமே....உன் சிங்கார சிரிப்பில் என்னைக் காண்கிறேன்....
என் பெண்மையைப் பரிப்பூரணமாக்கியவனே.....
உன் காலால் என் மார்பை மிதி....
உன் முத்துப் பற்களால் என் கன்னத்தைக் கடி......
உன் பிஞ்சி நகங்களால் என் உடலை காயம் செய்....
உன் விரல்களால் என் கூந்தலை கோது......
உனக்கென வாழும் உயிர் இது......உனக்காகவே வாழும் உயிர் இது.....
இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோமா...?????
இனி...இரவில் உன் மடியில் நான் படுக்க..நீ எனக்கு தாலாட்டு பாடு....... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, June 27, 2010

எதிர்ப்பார்க்கிறேன்........


ஆசையாய் என்னை அள்ளி அணைக்கிறாய்.......
மறுகணமே தள்ளி விடுகிறாய்......
அன்பாகப் பேசி என்னை அடிமையாக்குகிறாய்.....
வம்பாகப் பேசி என்னை அழவும் செய்கிறாய்.....
உனதாசைகளை நான் எனதாசையாய் நினைக்கும் போது
என் ஏக்கங்களுக்கு நீ செவி சாய்க்கக் கூடாதா???
கருவிழி அழகனே.....என் காதலுக்கும் கொஞ்சம் இடம் கொடுக்கக் கூடாதா???
அன்புக்காக உன்னிடம் மடியேந்தி நிற்கின்றேன்.....மனமிரங்கக் கூடாதா????
எனக்கு பூமாலையிடு என்று சொல்ல வில்லை....
வார்த்தைகளால் முள் மாலை போடாதே என்கிறேன்.....
வைரம் தேவை இல்லை....
உனது வைரம் போன்ற இதயத்தின் ஓரத்தில் இடம் ஒன்று தேவை...
தங்க நகை தேவை இல்லை....
உனது தங்க நிற உடலை கட்டியணைக்க உத்தரவு தேவை....
பணம் தேவை இல்லை...
பணத்தாலும் வெல்ல முடியாத உனது அன்பு எனக்கு தேவை.....
எதிர்ப்பார்க்கிறேன்....என்னை ஏமாற்ற மாட்டாய் என்று...... http://blog.tamilish.com/pakkam/5

Saturday, June 26, 2010

அவர்கள்.........

அடுத்தவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை என்று பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..அதில் தவறொன்றும் இல்லை....ஆனால்,தனது கடமைகளையும் தனக்கென வகுத்துக் கொடுத்த பொறுப்புகளையும் கூட சிலர் செய்ய சோம்பல் கொள்கிறார்களே..அது ஏன்??????
அது சோம்பலா?????அலட்சியமா???
எதுவாகினும் அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்...அவர்கள் அறிந்தே செய்யும் இந்த தப்பு நமது சமுதாயத்தை பாதிக்கிறது...பாதிக்கும்....
ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு.....சமுதாயத்திற்காக எதுவும் செய்யாமல் இருப்பது நியாயமாகுமா?????மன சாட்சிக்கு புறம்பானது அல்லவா???
ஆமாம்..மனசாட்சி இருந்தால்..இவ்வாறான சூழ்நிலையே உருவாகாதே...
நான் உங்களை புத்தனை போலவோ...காந்தியை போலவோ....தியாகம் செய்ய சொல்ல வில்லை....நானும் சுய நலவாதிதான்........
உங்கள் சுய நலத்திலும் கொஞ்சம் பொது நலம் பாருங்கள் என்கிறேன்.......

"அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை."(36)
http://blog.tamilish.com/pakkam/5

Thursday, June 24, 2010

மங்கையின் புலம்பல்


பெண்களை முக்கியமாக மனைவிகளை அடிமைப்படுத்துவதே கணவர்களின் எண்ணமோ????
தனக்கு பயந்து...தன் வார்த்தைக்கு மறுமொழி பேசாமல் வாழ பெண்கள் என்ன ஊமையா????
திருமணம் ஆனப் பிறகு நண்பர்களுடன் முன்பு போல் பேசக் கூடாது என்பது ஆண்கள் பெண்களுக்காகவே வகுத்த சட்டமோ?????
நடந்தால் குற்றம்....நின்றால் குற்றம்.....போனால் குற்றம் .....வந்தால் குற்றம்.....
கணவன் மனைவி உறவு நம்பிக்கையின் பேரில் இருக்க வேண்டும்........ஏன் தெரியுமா????
காதாலாக இருந்தாலும்..திருமணமாக இருந்தாலும் அதன் அஸ்த்திவாரம் நம்பிக்கைதான்.....
என்னை பொருத்தமட்டில்...நம்பிக்கைதான் காதல்...நம்பிக்கைதான் உறவு.....
நம்பிக்கை இல்லாத....சந்தேகத்துடன் வாழும் வாழ்க்கையில் உண்மை இல்லை...ஆழம் இல்லை.....இப்படிப் பட்ட வாழ்க்கையை ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்துதான் ஆக வேண்டுமா???? நம்பிக்கை வைக்கப் படாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பல மன உளைச்சல்களுக்கு ஆளாகி தனக்கென ஒரு பாதையை தேடிக் கொள்கிறார்கள்...நீங்கள் இல்லை என்று மறுத்தாலும் இதுதான் உண்மை... இருவரும் சேர்ந்து நரகத்தில் வாழ்வதை விட.......பிரிந்து சொர்கத்தில் வாழ்வது சுகம் அல்லவா???? http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, June 22, 2010

மன்னித்து விடு...கண்ணாளனே


கோபத்தால் அறிவிழந்து விட்டேன்....மன்னித்து விடு....
உன் பிஞ்சு நெஞ்சை ரணமாக்கி விட்டேன்....மன்னித்து விடு....
வார்த்தைகளால் உன்னை சுட்டெரித்து விட்டேன்...மன்னித்து விடு.....
உன் இதயத்தை கிழித்தேன் .....மன்னித்து விடு....
தயவு செய்து.....என்னை வெறுத்து விடாதே.....
நான் முகம் பார்க்கும் கண்ணாடி நீ.....
என் பிம்பத்தைக் காட்ட மறுப்பது தகுமோ....
மாயக் கண்களால் என்னை மயக்கியவனே....
என்னைப் போல் நீயும் கோபம் கொண்டு பேசி விடாதே......
தாங்காது என் நெஞ்சம்...............
மன்னித்தால்....உன் தோளில் சாய்வேன்..காதலியாக..
இல்லையெனில்...உன் மடியில் சாய்வேன்....பிணமாக.... http://blog.tamilish.com/pakkam/5

Monday, June 21, 2010

ஏக்கம்


உன் விரல்களின் கோதலுக்காக ஏங்குது..என் கூந்தல்
உன் உதடுகளின் தொடுதலுக்காக துடிக்குது என் உதடுகள்....
உன் மூச்சுக் காற்று வெப்பத்திற்காக சிணுங்குது என் மேனி.....
அருகில் இருந்தும் தொட முடியவில்லை.....
நெருங்கி வந்தும்.....கட்டியணைக்க வழியில்லை....
இது நமக்கு கிடைத்த சாபமா...இல்லை.....எனக்கு மட்டும் கிடைத்த....சோகமா....
என் மனதில் உண்டாகும் வலி உன்னிடமும் உண்டா....
ஒரு வேளை....இது ஒரு தலை ராகமோ..........
காத்திருக்கிறேன் உன் அன்பான வார்த்தைகளுக்காக...... http://blog.tamilish.com/pakkam/5

Saturday, June 19, 2010

கிறுக்கல்


அலையே....
நீ பெண்ணா ஆணா??????
ஆணைப் போல் அருகில் வந்து மயக்கம் தந்து...
பெண்ணைப் போல்
வெட்கப் பட்டு ஓடி விடுகிறாயெ....சொல்
நீ பெண்ணா???ஆணா?

மோகத் தீயில் என்னைத் தவிக்க விடுகிறாயே.....
நீ ஆணாகத்தான் இருக்க முடியும்.....
மயக்கம் தந்து மறைந்து விடுகிறாயே....நீ பெண்ணாக இருப்பாயோ.....????
உண்மையை சொல்லிவிடு......எதுவாகினும் நான் ஏற்றுக் கொள்வேன்.......
ஆனால் சொல்லாமல் போய் விடாதே....... http://blog.tamilish.com/pakkam/5

Thursday, June 17, 2010

கிறுக்கல்


காற்றும் இசையமைப்பாளந்தான்...
அதன் மெல்லிசைக்கு மரங்கள் நடனமாடுகின்றனவே...... http://blog.tamilish.com/pakkam/5

Friday, May 21, 2010

வாழ்க்கை


அன்பு...மனித நேயம்...
பாசம்..ஜீவராசியின் அடையாளம்..
இரக்கம்..உயிர்களின் உன்னதம்...
நட்பு...அது.. நம்பிக்கை...
காதல்... இரு மனங்களின் சேர்க்கை..
காமம்... இரு உயிர்களின் தாகம்....
குழந்தை...காதலுக்கும் காமத்திற்கும் கிடைக்கும் பரிசு...
துன்பம்....அவ்வபோது வரும் புயல்
இன்பம்..இதுவே நிரந்தரமான தென்றல்.....
இறப்பு.....மனித வாழ்க்கையின் கேள்விக்குறி???....... http://blog.tamilish.com/pakkam/5

Monday, May 17, 2010


காத்திருப்பது காதலில் சுகமா..?வலியா..?
காதலியைக் காக்க வைப்பது நியாயமா..?அநியாயமா..?
சிற்பத்தை உடைப்பது முறையோ...
ஓவியத்தை சிதைப்பது தகுமோ....
அது போல் காதலியைக் காக்க வைப்பதும் பிழையே....
இளைஞர்களே காதலுக்காக காத்திருங்கள்....காதலியைக் காக்க வைக்காதீர்கள்..... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, May 16, 2010

பிடிக்கும்.......


பாதித் தூக்க கனவில் தோன்றும் பள்ளிக்கூட நினைவுகள் பிடிக்கும்
எழுந்த பின்னும் போர்வைக்குள்ளே நுழைந்து கொஞ்சம் தூங்கப்பிடிக்கும்
நண்பர்கள் என்னைச் சுற்றியிருந்தால் நரகம் கூட எனக்குப் பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும் இந்த நிமிஷம் எனக்குப் பிடிக்கும்
தனியாய் இருந்தால் பேச பிடிக்கும்..சபையில் இருந்தால் மௌனம் பிடிக்கும்
என...க்குப் பிடித்தது பிடிக்கும் என்ற இதயங்களெல்லாம் எனக்குப் பிடிக்கும்... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, May 12, 2010

தவ‌ம்


முன்னோக்கி எனை நடத்தி முதுமை செய்யும் காலங்காள்
பின்னோக்கி எனை நடத்தி பிள்ளையாக்கக் கூடாதா....
சின்னஞ்சிறு வயதில் செய்த பிழையெல்லாம்
கண்ணீரின் வெப்பத்தில் கருகிவிட கூடாதா....
போட்டி பொறாமைகளைப் புறந்த‌ள்ளிச் சிரித்துவிட்டு
நீட்டிப் ப‌டுத்து ம‌ன‌ம் நிறைவுபெற‌க் கூடாதா???? http://blog.tamilish.com/pakkam/5

Sunday, May 9, 2010

கனவு


தந்தையின் தோளில் சாய்ந்தேன்....
தாயின் மடியில் உறங்கினேன்....
கூட்ட‌ஞ்சோறு ச‌மைத்தேன்....
நிலா சோறு உண்டேன்....
க‌வ‌லையில்லாமால் துள்ளி விளையாடினேன்...
குழ‌ந்தையாய் என் க‌ன‌வில்.... http://blog.tamilish.com/pakkam/5

Saturday, May 8, 2010

அம்மா


அம்மா.....
உலகை இயங்க வைக்கும் சொல்...அம்மா
உன்னையும் என்னையும் உலகம் அறிய செய்தது....அம்மா
கண்ணில் காணா தெய்வத்திற்குப் பால் அபிஷேகம் செய்வது போலி
உன் அம்மாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வர செய்..அதுவே உன் சோலி.....
பத்து மாதம் உனை சும‌ந்தாளே அவளை நீ நேசி...
உனை புறந்தள்ள இடுப்பு வலி பொறுத்தாளே அவளை நீ சுவாசி....
அம்மா...ஆயிரம் அர்த்தங்களை சொல்லும் உன்னத சொல்..... http://blog.tamilish.com/pakkam/5

சிரிப்பு


<வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது...
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் அது திறந்து கொள்கிறது...
சிறு சிறு சொர்க்கம் சிரிப்பு..ஜீவ அடையாளம் சிரிப்பு...
மரணத்தைத் தள்ளிப்போடும் மார்க்கம்தான் சிரிப்பு..
எங்கே!!!!
இரண்டு பேர் சந்தித்தால் தயவு செய்து மரணத்தை தள்ளிப் போடுங்களேன்......!! http://blog.tamilish.com/pakkam/5

மழலை


இதுவரை அச்சுக்கு வராத மொழி
யாரும் மொழிப்பெயர்த்து சொல்ல முடியாத மொழி
எனக்குத் தெரிந்த வரை மழலை மட்டும்தான்!!!! http://blog.tamilish.com/pakkam/5

Friday, May 7, 2010

கவிவர்மன்


குழல்இனிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா த‌வர்(66) http://blog.tamilish.com/pakkam/5