Tuesday, June 29, 2010

தேடுகிறேன்........


காற்றில் உனது மூச்சுக்காற்றை தேடினேன்....கிடைக்கவில்லை....
அருவியில் உனது உடல் நனைத்த நீர்த் துளிகளைத் தேடினேன்....கிடைக்கவில்லை....
உன் விரல் தொட்டப் பூக்களில் உன் ஸ்பரிசத்தைத் தேடினேன்....கிடைக்கவில்லை.....
நீ வரைந்த ஓவியத்தில் எனது சாயலை தேடினேன் ...கிடைக்கவில்லை.....
உன் கண்களில் என் பிம்பத்தைத் தேடினேன்...கிடைக்கவில்லை.....
ஆனால்.......
உன் உதடுகளில் என் உயிரை தேடினேன்.....கிடைத்தது.....
உன் இதயத்தில் என் இதயத்தைத் தேடினேன் கிடைத்தது.....
உனது வார்த்தையில் எனது பெயரைத் தேடினேன் கிடைத்தது........
உனது அன்பில் எனது காதலை தேடினேன் கிடைத்தது......
என்னை ஆள்பவனே.......உன் வாழ்வில் என் மரணத்தை தேடுகிறேன்.....
கிடைக்குமா????? http://blog.tamilish.com/pakkam/5

Monday, June 28, 2010

என்னைக் காண்கிறேன்....


என் பிம்பமே......உன் தாமரைக் கண்ணில் என்னை காண்கிறேன்.....
என் வயிறு சுமந்த நிலவே....உன் செய்கையில் என்னைக் காண்கிறேன்....
என் நாயகனே ....உன் மழலைப் பேச்சில் என்னைக் காண்கிறேன்.....
என் செல்வமே....உன் சிங்கார சிரிப்பில் என்னைக் காண்கிறேன்....
என் பெண்மையைப் பரிப்பூரணமாக்கியவனே.....
உன் காலால் என் மார்பை மிதி....
உன் முத்துப் பற்களால் என் கன்னத்தைக் கடி......
உன் பிஞ்சி நகங்களால் என் உடலை காயம் செய்....
உன் விரல்களால் என் கூந்தலை கோது......
உனக்கென வாழும் உயிர் இது......உனக்காகவே வாழும் உயிர் இது.....
இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோமா...?????
இனி...இரவில் உன் மடியில் நான் படுக்க..நீ எனக்கு தாலாட்டு பாடு....... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, June 27, 2010

எதிர்ப்பார்க்கிறேன்........


ஆசையாய் என்னை அள்ளி அணைக்கிறாய்.......
மறுகணமே தள்ளி விடுகிறாய்......
அன்பாகப் பேசி என்னை அடிமையாக்குகிறாய்.....
வம்பாகப் பேசி என்னை அழவும் செய்கிறாய்.....
உனதாசைகளை நான் எனதாசையாய் நினைக்கும் போது
என் ஏக்கங்களுக்கு நீ செவி சாய்க்கக் கூடாதா???
கருவிழி அழகனே.....என் காதலுக்கும் கொஞ்சம் இடம் கொடுக்கக் கூடாதா???
அன்புக்காக உன்னிடம் மடியேந்தி நிற்கின்றேன்.....மனமிரங்கக் கூடாதா????
எனக்கு பூமாலையிடு என்று சொல்ல வில்லை....
வார்த்தைகளால் முள் மாலை போடாதே என்கிறேன்.....
வைரம் தேவை இல்லை....
உனது வைரம் போன்ற இதயத்தின் ஓரத்தில் இடம் ஒன்று தேவை...
தங்க நகை தேவை இல்லை....
உனது தங்க நிற உடலை கட்டியணைக்க உத்தரவு தேவை....
பணம் தேவை இல்லை...
பணத்தாலும் வெல்ல முடியாத உனது அன்பு எனக்கு தேவை.....
எதிர்ப்பார்க்கிறேன்....என்னை ஏமாற்ற மாட்டாய் என்று...... http://blog.tamilish.com/pakkam/5

Saturday, June 26, 2010

அவர்கள்.........

அடுத்தவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை என்று பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..அதில் தவறொன்றும் இல்லை....ஆனால்,தனது கடமைகளையும் தனக்கென வகுத்துக் கொடுத்த பொறுப்புகளையும் கூட சிலர் செய்ய சோம்பல் கொள்கிறார்களே..அது ஏன்??????
அது சோம்பலா?????அலட்சியமா???
எதுவாகினும் அவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்...அவர்கள் அறிந்தே செய்யும் இந்த தப்பு நமது சமுதாயத்தை பாதிக்கிறது...பாதிக்கும்....
ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு.....சமுதாயத்திற்காக எதுவும் செய்யாமல் இருப்பது நியாயமாகுமா?????மன சாட்சிக்கு புறம்பானது அல்லவா???
ஆமாம்..மனசாட்சி இருந்தால்..இவ்வாறான சூழ்நிலையே உருவாகாதே...
நான் உங்களை புத்தனை போலவோ...காந்தியை போலவோ....தியாகம் செய்ய சொல்ல வில்லை....நானும் சுய நலவாதிதான்........
உங்கள் சுய நலத்திலும் கொஞ்சம் பொது நலம் பாருங்கள் என்கிறேன்.......

"அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றுஅது
பொன்றும்கால் பொன்றாத் துணை."(36)
http://blog.tamilish.com/pakkam/5

Thursday, June 24, 2010

மங்கையின் புலம்பல்


பெண்களை முக்கியமாக மனைவிகளை அடிமைப்படுத்துவதே கணவர்களின் எண்ணமோ????
தனக்கு பயந்து...தன் வார்த்தைக்கு மறுமொழி பேசாமல் வாழ பெண்கள் என்ன ஊமையா????
திருமணம் ஆனப் பிறகு நண்பர்களுடன் முன்பு போல் பேசக் கூடாது என்பது ஆண்கள் பெண்களுக்காகவே வகுத்த சட்டமோ?????
நடந்தால் குற்றம்....நின்றால் குற்றம்.....போனால் குற்றம் .....வந்தால் குற்றம்.....
கணவன் மனைவி உறவு நம்பிக்கையின் பேரில் இருக்க வேண்டும்........ஏன் தெரியுமா????
காதாலாக இருந்தாலும்..திருமணமாக இருந்தாலும் அதன் அஸ்த்திவாரம் நம்பிக்கைதான்.....
என்னை பொருத்தமட்டில்...நம்பிக்கைதான் காதல்...நம்பிக்கைதான் உறவு.....
நம்பிக்கை இல்லாத....சந்தேகத்துடன் வாழும் வாழ்க்கையில் உண்மை இல்லை...ஆழம் இல்லை.....இப்படிப் பட்ட வாழ்க்கையை ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்துதான் ஆக வேண்டுமா???? நம்பிக்கை வைக்கப் படாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பல மன உளைச்சல்களுக்கு ஆளாகி தனக்கென ஒரு பாதையை தேடிக் கொள்கிறார்கள்...நீங்கள் இல்லை என்று மறுத்தாலும் இதுதான் உண்மை... இருவரும் சேர்ந்து நரகத்தில் வாழ்வதை விட.......பிரிந்து சொர்கத்தில் வாழ்வது சுகம் அல்லவா???? http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, June 22, 2010

மன்னித்து விடு...கண்ணாளனே


கோபத்தால் அறிவிழந்து விட்டேன்....மன்னித்து விடு....
உன் பிஞ்சு நெஞ்சை ரணமாக்கி விட்டேன்....மன்னித்து விடு....
வார்த்தைகளால் உன்னை சுட்டெரித்து விட்டேன்...மன்னித்து விடு.....
உன் இதயத்தை கிழித்தேன் .....மன்னித்து விடு....
தயவு செய்து.....என்னை வெறுத்து விடாதே.....
நான் முகம் பார்க்கும் கண்ணாடி நீ.....
என் பிம்பத்தைக் காட்ட மறுப்பது தகுமோ....
மாயக் கண்களால் என்னை மயக்கியவனே....
என்னைப் போல் நீயும் கோபம் கொண்டு பேசி விடாதே......
தாங்காது என் நெஞ்சம்...............
மன்னித்தால்....உன் தோளில் சாய்வேன்..காதலியாக..
இல்லையெனில்...உன் மடியில் சாய்வேன்....பிணமாக.... http://blog.tamilish.com/pakkam/5

Monday, June 21, 2010

ஏக்கம்


உன் விரல்களின் கோதலுக்காக ஏங்குது..என் கூந்தல்
உன் உதடுகளின் தொடுதலுக்காக துடிக்குது என் உதடுகள்....
உன் மூச்சுக் காற்று வெப்பத்திற்காக சிணுங்குது என் மேனி.....
அருகில் இருந்தும் தொட முடியவில்லை.....
நெருங்கி வந்தும்.....கட்டியணைக்க வழியில்லை....
இது நமக்கு கிடைத்த சாபமா...இல்லை.....எனக்கு மட்டும் கிடைத்த....சோகமா....
என் மனதில் உண்டாகும் வலி உன்னிடமும் உண்டா....
ஒரு வேளை....இது ஒரு தலை ராகமோ..........
காத்திருக்கிறேன் உன் அன்பான வார்த்தைகளுக்காக...... http://blog.tamilish.com/pakkam/5

Saturday, June 19, 2010

கிறுக்கல்


அலையே....
நீ பெண்ணா ஆணா??????
ஆணைப் போல் அருகில் வந்து மயக்கம் தந்து...
பெண்ணைப் போல்
வெட்கப் பட்டு ஓடி விடுகிறாயெ....சொல்
நீ பெண்ணா???ஆணா?

மோகத் தீயில் என்னைத் தவிக்க விடுகிறாயே.....
நீ ஆணாகத்தான் இருக்க முடியும்.....
மயக்கம் தந்து மறைந்து விடுகிறாயே....நீ பெண்ணாக இருப்பாயோ.....????
உண்மையை சொல்லிவிடு......எதுவாகினும் நான் ஏற்றுக் கொள்வேன்.......
ஆனால் சொல்லாமல் போய் விடாதே....... http://blog.tamilish.com/pakkam/5

Thursday, June 17, 2010

கிறுக்கல்


காற்றும் இசையமைப்பாளந்தான்...
அதன் மெல்லிசைக்கு மரங்கள் நடனமாடுகின்றனவே...... http://blog.tamilish.com/pakkam/5