Sunday, May 27, 2012

நினைவுகள்

விலகி நின்றேன் உன் நினைவுகளிலிருந்து.... நீயோ..நெருங்கி வந்தாய் நினைவுக்குள்ளே நெருங்கி வந்தேன்....உன்னை அள்ளி அணைக்க... உதறி சென்றாய் ...என் நெஞ்சம் வலிக்க... காத்துக் கிடக்கிறேன் உன் காதலுக்காக.... மீண்டும் வருவாயா...என்னை தாங்கிப் பிடிக்க.... இமைக் கூட..இமைக்க மறக்கும்.... என் மின் அஞ்சலை திறக்க மறப்பதில்லை... உன் மனதைப் போல்....அதுவும் காலியாகவே..இருக்கிறது... என் நினைவுகள் இல்லாமல்...... http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, May 22, 2012

ச்ச்சீசீ........என்ன உலகமடா....இது....

ச்ச்சீசீ........என்ன உலகமடா ....இது.... சுய நல ஓநாய்கள் சுற்றி திரியும்.... உலகம்..... தன்னலம் கருதும்...பேய்கள் வாழும் உலகம்..... நட்பெனும் போர்வையில்..மறைந்து கிடக்கும்.... மலைப்பாம்புகள் நிறைந்த உலகம்... இனிப்பாய் பேசி.....கசப்பைக்..கக்கும்... சூனியமான உலகம்..... பொய்யாய் சிரித்து..விஷத்தை உமிழும்.. காட்டேரிகள் வாழும் உலகம்...... http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, April 10, 2012

ஐந்து நிமிடம்....


ஐந்து நிமிடங்கள்....போதும் எனக்கு..
உன்னோடு நான் வாழ்ந்த அந்த ஐந்து நிமிடங்கள்..
போதும் எனக்கு...
வாழ்வின் எல்லை வரை...கடைசி மூச்சு வரை...
போதும் எனக்கு....
இரண்டு நிமிட அணைப்பு...
இரண்டு நிமிட முத்தம்...
ஒரே ஒரு நிமிட.....கூடல்...
இது போதும் எனக்கு...
உனக்காக என்னையே தரும் எனக்கு
தருவாயா?????
இன்னுமொரு...ஐந்து நிமிடம்.... http://blog.tamilish.com/pakkam/5

Thursday, March 22, 2012

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.(151)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.(152)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.(159) http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, March 21, 2012

இகழ்ந்தாலும் கவிகளுக்குப் புகழாரமே...


எல்லார்க்கும் எல்லாமே பிடித்து விட்டால்....
சுவாரஸ்யம் இல்லையடா....
அன்னம் உனக்கு காகமாய் தெரிந்தால்
நான் என்செய்வேனடா...
இகழ்ந்தாலும் கவிகளுக்குப் புகழாரமே...
மட மனிதர்க்கு புரியவில்லையடா.....
புகழ்ந்தற்கு நன்றி சொல்வேன்....
கோடான கோடி நன்றியடா...
புதுக்கவிதைக்குத் தேவையில்லை இலக்கணமடா....
புதுக்கவிஞர்கள் கூறிய போது.... செவிடனாய் போனாயடா....
உரைவீச்சு.....உள்ளத்தின் குமுறலடா...
இதில் இலக்கணம் தேடுபவர்.....கிறுக்கனடா..!!!!!!! http://blog.tamilish.com/pakkam/5

Tuesday, March 20, 2012

என் சுவாசமே....



என் சுவாசமே.....என் உடல் எனும் வீணையில்...
உன் விரல்கள் இசை மீட்டாதா....
ஆனந்த பைரவியை மீட்டுவாய்..என எதிர்பார்த்த நேரத்தில்....
முகாரியை மீட்டிவிட்டாயே....
என் மனம்....அழும் ஒசை உன் காதில்...விழ வில்லையா....???
உன் காலடி ஓசையே....எனக்கு காலை அலாரம்...
உன் சிரிப்பொலியே..எனக்கு மதிய உணவு...
உன் இதழ் சிந்தும் வார்த்தைகளே....எனக்கு தாலாட்டு....
உன் வாய்மொழியே....எனக்கு அமுத மொழி....
மெய்யான நம் உறவில்...பொய் எதற்கு....
உன்னுடைய உண்மையான அன்பை ..
ஒரெ ஒரு பொய்....கலங்கம் செய்து விட்டதே.....
பொய் வேண்டாம் அன்பே.....உண்மையான நம் உன்னத உறவில்..... http://blog.tamilish.com/pakkam/5

Thursday, February 23, 2012

நட்பு.......


மூன்றெழுத்து மந்திரம்...அது முடிவில்லா சமுத்திரம்...
ஒரே கருவறையில் இருக்க வில்லை..நீயும் நானும்..
ஆனால்,
அவரவர் இதய அறையில் இருக்கிறோமே ..
இது என்ன அதிசயம்...
என்னவன் பார்த்த முதல் பார்வைக் கூட
மறந்து போனதே...
என் உயிரே..உனது பார்வை என் இதயத்தில் இனிக்கிறதே....
நட்பின் தாய்மொழியே.....
கல்லறை சேர்ந்தாலும்...உயர்ந்து கொண்டே போகும்..
தமிழ்மொழிப் போல்...நமது நட்பு....... http://blog.tamilish.com/pakkam/5