Thursday, September 27, 2012

தூக்குதண்டனைதான்....உனக்கு..

பெண்களைத் தூற்றும்..கவிஞர்களே... சற்று..ஆண்களின் அவலங்களை...எழுதுங்களேன்.... சுயநலவாதிகள்....பெண் மனம் அறியா..சுயநலவாதிகள்.. ஆண்கள்!!!!!!!! தேவைக்கு சேவை செய்ய சொல்லி... செருப்பாய் நினைப்பர் பெண்களை... பெண்..நெருப்பாக மாறினால்.. என்னவாகும்..அவர் நிலைமை..... வல்லவர்கள் ஆண்கள்... நம்பிக்கை துரோகம் செய்வதில்.. சிறந்தவர்கள் ஆண்கள்... பெண் மனதைக் காயம் செய்வதில்... ஆண்களின் இயல்பே..... பெண்களின் பலவீணத்தை...பயன்படுத்திக்கொள்வதோ.... இனிப்பான பேச்சு...பொய்யான சிரிப்பு.... இதுதான்....ஆணோ.... பழம்..பாலில் விழும் வரை... நடித்திடுவர் பழத்தின்..சுவை குறைந்தவுடன்... வெறுத்திடுவர்.... பெண்கள்... கெஞ்சினால்..மிஞ்சும்...ஆண்களே.. பெண் கெஞ்சுவது... அடங்கி போய்.அல்ல... உன் அன்பில் மயங்கி போய்தான்... அன்பை..மதிக்க தெரியாத.. ஆண்களே.... அன்பெனும்..வேஷம்.போட்டு.. ஏமாற்றும்..அழகர்களே... பெண்மை...அடங்கி இருப்பது.. உன்னைக் கண்டு பயந்து..அல்ல.. உன் விஷ சொற்களை... கேட்க மனவலிமை..இல்லாமல்தான்... உன்...சொல் அம்பு...குத்தி..குத்தியே... நெஞ்சம்..குருதியில்.குளித்து விட்டது.. இன்னமும்...இடமில்லை நெஞ்சில்.. உன் அம்புகளை...ஏற்க... நிறுத்திக்கொள்.....உன் காதல் விளையாட்டை... அடக்கிக் கொள்...உன் ஆண்மையின் ஆட்டத்தை.. இறுதியாக சொல்கிறேன்.... என் காதலைப் பிணமாக்கி... அதில் நெருப்பூட்டி.... குளிர்காயும்....கொலைக்காரன்..நீ... தூக்குதண்டனைதான்....உனக்கு.. என் மனம் எனும் நீதிமன்றத்தில்................... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, September 26, 2012

மெளனம் கலைத்து வெளியே வா.....

ஆயிரம் ஆயிரமாய் மல்லிகைப் பூ பூத்துக்குழுங்கும் தோட்டத்தில்.. ரோஜா செடியை நட்டால்.. அதிலிருந்து மலர்வது ரோஜாதான்.... அதன் குணம் மாறாது... அதன் மணம் மாறாது... ஆனால்....... நான்கு பேர் சேர்ந்து நஞ்சூற்றினால் மனித குணம் மாறுவதேனோ....???? பழையன கழிதலும்... புதியன புகுதலும் பொங்கலுக்குதானே... நட்புக்கு அல்லவே... நம் உறவுக்கு அல்லவே..... மெளனம்..உன் மெளனம்... என்னை மிரட்டுகிறது... என் காதில் ஓலமிடுகிறது.... மெளனம் கலைத்து வெளியே வா..... என் மெளனம் கலைக்க வெளியே வா.... மெளனம்...என் மெளனம் என்னையே மறக்க செய்கிறது... உன்னை வெறுக்க செய்கிறது... மெளனம் மரணமாய் மாறும் முன் சத்தம் செய்...முடிந்தால்... ஒரு முத்தம் செய்.... முத்தத்தினால்...ஒரு யுத்தம் செய்...... http://blog.tamilish.com/pakkam/5

Monday, September 24, 2012

வாழ்க்கையே...யார் நீ????

வாழ்க்கையே...யார் நீ???? ஏமாற்றம் எனும் நாவலுக்கு எழுத்தாளனா...? சோகம் எனும் கவிதைக்கு கவிஞனா...? உயிர் சொட்டும் என் கனவுகள் காகித பூவாய் மாறும் காரணம் என்ன...? வாழ்க்கையே யார் நீ???? மலர்கள் கொஞ்சும் சோலையா...? சிங்கம் வாழும் குகையா....? வாசனை திரவியமா...? நாற்றம் மிகுந்த குப்பைக்கூளமா...? தெளிவும் குழப்பமும் மாறி மாறி என்னைக் கொல்கிறதே.... வாழ்க்கையே யார் நீ???? தேவர்களின் தேவதையா...? எமனின் தூதுவனா...? அழகிய ரோஜாவா...? அதிலிருக்கும் முள்ளா...? கதாநாயகனா...? வில்லனா...? வாழ்க்கையே யார் நீ???? http://blog.tamilish.com/pakkam/5

Thursday, September 13, 2012

என்ன உறவு நமக்குள்...?

யோசிக்கிறேன்.... என்ன உறவு நமக்குள்...? நட்புடன் பழகியதால்... நண்பன் என்றா உறவா.... தோள் கொடுத்து உதவியதால்... உற்ற தோழமை என்ற உறவா... இதயம் இணைந்ததால்... காதல் என்ற உறவா.... இதழ்கள் சேர்ந்ததால்.. கணவன் மனைவி உறவா... ஊடலும் அதன் பின் கூடலும்... நமக்குள் நடக்கிறதே... என்ன உறவு நமக்குள் ?? விடை தேடி அலைகிறேன்... தினம்...தினம்..... என்ன உறவு நமக்குள் ???? http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, September 12, 2012

நாளையே திருமணம்

"காத்திருந்தாள்.... தன் காதலன் வருகைக்காக.. மணல் மேலே படுத்து...வானத்தைப் பார்த்து..." "காதலனும் வந்தான்... அவன் மடியில் சாய்ந்தாள்... தழுவினர்...மகிழ்ந்தனர்....." கண்ணீர்..அவள் கண்ணில்.... ஏன் என்றான் காதலன்..." "தழுவுதல்...மகிழ்தல்.. எல்லாம் சரிதான்... திருமணம் எப்போது என்றாள்" "விரைவில் உன்னைக் கரம் பிடிப்பேன் , ஆனால்.. அதற்கு முன் இவ்வுலகின் துன்பப்பகுதியை மறந்து இருவரும் இன்பக்கனியில் திளைத்திடுவோம்... காதல் எல்லை எதுவரை என்று கண்டறிவோம் என்றான்" அவளை அணைத்தான்.. திடீரென்று... நில்லுங்கள்...என்ற குரலொலி திரும்பிப் பார்த்தான்... காதலியின் தோழி அவன் முன்... தோழி கூறினாள்.... " காதல் லீலை புரிபவரே... குறை ஏதும் இல்லை உன் அன்பில் ஆனால், நீண்டக்காலம் காதல் செய்யவோ இப்பெண்ணின் பெற்றோர் விரும்ப மாட்டார்கள்... தள்ளி போடாதீர் மணவிழாவை... வயதான கொக்கும் கூட கொத்திப் போகும் இக்கன்னி மீனை..."என்றாள்.. "அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க... வயோதிகன் எவனும் இவளை மணக்காமல் இருக்க..சூட்டி விடு மணமாலையை...." என்றாள் " என் இதய அறையில் இருக்கும் பூவை கிழத்தேனிக்கு இரையாக்க மாட்டேன். " என்றான் கண்ணாளன்... என்று மிக அழகாகப் பாடியுள்ளார் அம்மூவனார் ஐங்குறுநூறு பாடலில்.. பாடல்(180) http://blog.tamilish.com/pakkam/5

Monday, September 10, 2012

சேரன்...மறவன்....

தலைக்குனியா மன்னனவன்... தலைக்கு மேல் தூக்கிதான் கொஞ்சுவான்... தான் பெற்ற பிள்ளையைக்கூட... கரம் பிடித்தவளின் இதழில் இதழ் பதித்தால்... குனியக்கூடுமே என்று... நெற்றியில் முத்தமிடும்....அரசனவன்.. வளையாத முதுகெலும்பு படைத்தவனோ... என்று ஆச்சரியமுற்றவர் பலர்.... தொண்டி துறைமுகத்தை ஆண்ட தலைவனவன்... மூவன் எனும் வேந்தனை வீழ்த்தி... அவன் பற்களைக் கோட்டை வாயில் கதவில் தொங்க விட்ட வீரனவன்.....சேரனவன்... பார் எங்கும் புலிக்கொடியைப் பறக்க விட்ட சோழத்திருமகனைத் தோற்கடிக்க படைத்திரட்டினான்...போர்தொடுத்தான்.... ஒலியைக் கிழிக்கும் ஒளியாய் கிளம்பினான்.... வெற்றி யாருக்கு...தோல்வி யாருக்கு என கணிக்க முடியாத போர்களமாய்..இருந்தது.... வெற்றித் திருமகளோ....சோழனின் பக்கம் சாய்ந்தாள்... ஆற்றல் முழுவதும் காட்டியும்... சேரனவன் சிக்கிவிட்டான்...புலிக்கொடி வேந்தனிடம்... சிறையில் சேரனோ...அணு அணுவாய் சிதைந்து போனான்...தோல்வியின்...வலியால்.... தாகம் எடுக்க....ஒரு நாள்.... தண்ணீர் கேட்டான் சேரன்... காவலாளி தாமதித்த காரணத்தினாலே..... கோபம் கொண்ட அப்பெருந்தலைவன்.... எதிரியின் சிறையில்...நாய் போன்று வாழ்வது இழிவு.... உயிரை விட்டொழிப்பதே...சிறப்பு.. என....கடைசி மூச்சை ..காற்றோடு கலந்து விட்டான்... இப்படி..சேரனின் புகழ் பாடுகின்றார் "சேரமான் கணைக்கால் இரும்பொறை. (புறநானூறு : பாடல் 74) http://blog.tamilish.com/pakkam/5

Sunday, September 9, 2012

அவரவர்..உள்ளம் மட்டும் உணரும்....

தவறுகள் எல்லாம் தவறுகள் அல்ல.. நீ..தவறாய் நினைக்காத போது... நல்லதும் கூட தவறாய் போகும்... தவறாய் நீ நினைத்து விட்டால்.... கொலையும் கூட சரியே.. நீ ..சரி என்று நினைத்தால்... தானம் கூட பிழையே... நீ தவறு என்று எண்ணிவிட்டால்..... சரியோ....தவறோ அவரவர் மனம் மட்டும் அறியும்.... நல்லதோ..கெட்டதோ... அவரவர்..உள்ளம் மட்டும் உணரும்.... http://blog.tamilish.com/pakkam/5

Wednesday, September 5, 2012

யாதும் ஊரே ; யாவரும் கேளீர் !!!

தொப்புள் கொடி பந்தமில்லை... ஆனால்,யாவரும் ஒரே குலமாம்.... இரத்த சொந்தமில்லை.... ஆனால், அனைவரும் ஒரே இனமாம்.... கண்ணாடி உன் பிம்பத்தை காட்டுவது போல..... நல்லதும் கெட்டதும் பிறருக்கு நீ இழைத்ததே உனக்கு வருமாம்.... மேகங்கள் வந்து மறைவதுபோல்... இன்பமும் துன்பமும் மாறிவருவது போல் இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவதுதான் மனித வாழ்க்கையாம்.... எதிர்நீச்சல் போட்டு மெம்மேலும் உயர்பவரே.....மானுடத்தில் மாணிக்கமாம்.... பணம் உள்ளவரை போற்றுதல் இழிவாம்... பணம் இல்லாதவரை தூற்றினால்... நீயே கழிவாம்..... விஷயங்கள் ..பல கற்ற... பெரியோரின் சொற்படி நடப்போம்.. என புறநானு பாடலில் (192) உலகிற்கு உரைக்கிறார்..பாரினில் சிறந்த கணியன் பூங்குன்றன்... http://blog.tamilish.com/pakkam/5

Monday, September 3, 2012

தொண்ணூற்று ஒன்பது

அதிசயித்தேன் இயற்கை அன்னை அளித்த பூவினங்களை எண்ணி.... ஆச்சரியித்தேன் சங்கத்தமிழ் தந்த மலர்களைப் படித்து... தொண்ணூற்று ஒன்பது வகை பூவாம்.... குறிஞ்சிப்பாட்டில் கூறுகின்றார்... கவிநாயகர் கபிலர்.... ஒரு முறை படிக்கவே மூச்சுமுட்டுதமா... மறுமுறை படிக்கவோ..நெஞ்சம் துள்ளுதம்மா... நான் சுவைத்த தமிழின் சுவையை.. நீங்களும் சுவைத்திட... இதோ அணிவிக்கிறேன்.. உங்கள் கழுத்தில்..கபிலர் தொடுத்த... பூச்சரத்தை......அகர வரிசையில்..... 1. அடும்பு 2. அதிரல் 3. அவரை - நெடுங்கொடி அவரை 4. அனிச்சம் 5. ஆத்தி - அமர் ஆத்தி 6. ஆம்பல் 7. ஆரம் (சந்தன மர இலை) 8. ஆவிரை - விரிமலர் ஆவிரை 9. இருள்நாறி - நள்ளிருள் நாறி 10. இலவம் 11. ஈங்கை 12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 13. எருவை 14. எறுழம் - எரிபுரை எறுழம் 15. கண்ணி - குறு நறுங் கண்ணி 16. கரந்தை மலர் 17. கருவிளை - மணிப்பூங் கருவிளை 18. காஞ்சி 19. காந்தள் - ஒண்செங் காந்தள் 20. காயா - பல்லிணர்க் காயா 21. காழ்வை 22. குடசம் - வான் பூங் குடசம் 23. குரலி - சிறு செங்குரலி 24. குரவம் - பல்லிணர்க் குரவம் 25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி 26. குருகிலை (குருகு இலை) 27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம் 28. குவளை (மலர்) - தண்கயக் குவளை 29. குளவி (மலர்) 30. குறிஞ்சி 31. கூவிரம் 32. கூவிளம் 33. கைதை 34. கொகுடி - நறுந்தண் கொகுடி 35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை 36. கோங்கம் - விரிபூங் கோங்கம் 37. கோடல் 38. சண்பகம் - பெருந்தண் சண்பகம் 39. சிந்து (மலர்) 40. சுள்ளி மலர் 41. சூரல் 42. செங்கோடு (மலர்) 43. செம்மல் 44. செருந்தி 45. செருவிளை 46. சேடல் 47. ஞாழல் 48. தணக்கம் (மரம்) 49. தளவம் 50. தாமரை - முள் தாள் தாமரை 51. தாழை மலர் 52. திலகம் (மலர்) 53. தில்லை (மலர்) 54. தும்பை 55. துழாஅய் 56. தோன்றி (மலர்) 57. நந்தி (மலர்) 58. நரந்தம் 59. நறவம் 60. நாகம் (புன்னாக மலர்) 61. நாகம் (மலர்) 62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 64. பகன்றை 65. பசும்பிடி 66. பயினி 67. பலாசம் 68. பாங்கர் (மலர்) 69. பாதிரி - தேங்கமழ் பாதிரி 70. பாரம் (மலர்) 71. பாலை (மலர்) 72. பிடவம் 73. பிண்டி 74. பித்திகம் 75. பீரம் 76. புன்னை - கடியிரும் புன்னை 77. பூளை - குரீஇப் பூளை 78. போங்கம் 79. மணிச்சிகை 80. மராஅம் 81. மருதம் 82. மா - தேமா 83. மாரோடம் 84. முல்லை - கல் இவர் முல்லை 85. முல்லை 86. மௌவல் 87. வகுளம் 88. வஞ்சி 89. வடவனம் 90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை 91. வள்ளி 92. வாகை 93. வாரம் 94. வாழை 95. வானி மலர் 96. வெட்சி 97. வேங்கை 98. வேரல் 99. வேரி மலர் http://blog.tamilish.com/pakkam/5

anonymous...தோழியே..உங்களுக்காக...

கவியின் அழகை ரசிக்கத் தெரியாத கழுதைகளே... சிரிக்கிறேன் உங்கள் அறியாமையை நினைத்து... செருக்கும் திமிரும் ஆணவமும் கொண்ட ஆந்தைகளே... வருந்துகிறேன் உங்கள் அவல நிலையைக் கண்டு... படித்ததுண்டா..அறிவிலிகளே .. இது வரை கவிதை நூலை... சொல்கிறேன்....கடுகளவும் மானம் இருந்தால்... படித்துப்பாருங்கள்....கவிதை நூல்களை.... உணர்ச்சியும்...அதற்கு..உருவமும்.. இருந்தால்தான் கவிதை.... எனதெழுத்தில் ..உணர்ச்சியும் இருக்கும்... அதற்கு உயிரும் இருக்கும்.... குரைக்கும் நாய் சூரியனை என்ன செய்ய முடியும்.....?? நான் சூரியன்...நீ???? பாவம்.... என் கவியில் குறைக்கூறும் பெண்ணெ... மறுமுறை...உன் பெயரையும் குறிப்பிடு.... அதற்கும் கவி சொல்கிறேன்...உணர்ச்சியோடு..... பிறர் முதுகைப் பார்ப்பதை விடுத்து... உன் முகத்தில் இருக்கும் அழுக்கை சுத்தப்படுத்து... இதுவே..உனக்காக நான் சொல்லும் கருத்து...... http://blog.tamilish.com/pakkam/5

Sunday, September 2, 2012

சொர்க வாசல் திறக்குமா????

இயற்கை அழகிற்கும் வளத்திற்கும் பஞ்சமில்லாத ஊர். அழகில் மட்டுமா, இனத்தையும் உரிமையையும் காக்க உயிரையே தியாகம் செய்யத் துணியும் மறத்தமிழர்கள் வாழும் ஊர். இவை அனைத்தும் இருந்தும் சுதந்திரம் இல்லை. சொந்த மண்ணிலே அகதிகளைப் போலவும் திருடர்களைப் போலவும் பயந்தும் மறைந்தும் வாழ வேண்டிய சூழ்நிலை. என்ன கொடுமையடா இது. மக்கள் படும் இன்னல்களுக்கு மருந்தாக பிறந்தவந்தான் கனலன். சிறுவயது முதலே கொடுமையையும் வறுமையையும் சித்ரவதையையும் பார்த்து அனுபவித்து , பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா" என கூக்குரலிட்டு தனது மக்களுக்காக உயிரையும் துச்சமென நினைத்தவன் கனலன். தன்னுடன் தம்மைப் போல வீர நெஞ்சம் படைத்த நண்பர்களுடன் ஒன்றிணைந்து தமதுரிமையை நிலைநாட்ட உலகமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு இராணுவப்படையை உருவாக்கியவன் கனலன். ஒவ்வொரு நாளும் மேகங்கள் உருவாகிக் களைவது போல ஒவ்வொரு தலைவர்களும் கனலனின் படையை வீழ்த்த முயன்றனர். ஆனால் சிங்கத்தை வீழ்த்த செந்நாயால் முடியுமா? வேண்டமடா இந்த விஷப்பரிட்சை என்று அஞ்சி ஓடி விட்டார்கள். ஆனால் மனித இதயமே இல்லாத கொடூரமான நயவஞ்சகன் ஆட்சிக்கு வந்தான். மனித ரூபத்தில் நடமாடும் அரக்கன் அவன். நேர்வழியில் போராட துணிவில்லமால் முதுகில் குத்திய கோழை. அவன் தான் நண்டிமித்ரா. இந்த பாதகனால் மக்கள் படும் அவஸ்தையும் படுகின்ற இன்னல்களும் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை. பச்சிளங்குழந்தைகள் முதல் பண்பட்ட முதியோர்கள் வரை இவன் அதிகார ஆட்சியினால் ஆயிரம் ஆயிரமாய் செத்து மடிந்தனர். பள்ளி சிறுவர்கள் கூட புதரிலும் குழியிலும் ஒளிந்து கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. எந்நேரத்தில் குண்டு மழை பெய்யும் என்ற ஐயம் நேற்று பிறந்த குழந்தையின் மனதைக் கூட ஆட்கொண்டது. நிறைமாத கற்பிணிகளுக்குகூட தயவு காட்டாத கேவலமானவன் அவன். கன்னிப் பெண்கள் கற்பை சூரையாடும் அற்பப்புத்திக் கொண்டவன். கனலனோ எந்த எதிர்ப்பு வந்தாலும் தன் படைகளுடன் மக்களின் நலனுக்காக போராடி வந்தான். மக்கள் கனலனைத் தன் இதயக் கோவிலின் வைத்து போற்றினார்கள். தங்களைக் காக்க கனலன் இருக்கிறான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு நாட்களைக் கடத்தினார்கள். நண்டிமித்ராவின் இரக்கமற்ற இராணுவத்திற்கும் நேர்வழி மட்டுமே தெரிந்த கனலனின் இராணுவத்திற்கும் இடையே போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. மக்களை மட்டும் குறிவைத்து நகர்ந்தது நண்டிமித்ராவின் இராணுவம். நாளுக்குநாள் மக்கல் ஆயிரங்கணக்கில் செத்து மடிந்தனர். மக்களின் இறப்பு எண்ணிக்கை உயர உயர நண்டிமித்ராவின் ஆணவமும் ஆனந்தமும் பல்மடங்காயின. உலக நாடுகளின் கூக்குரலுக்குச் செவிச்சாய்க்காமல் செருக்குப் பிடித்த மத யானையைப் போல் திரிந்தனர் நண்டிமித்ராவின் படைவீரர்கள்.காட்டிக்கொடுக்கவும் கூட்டிக்கொடுக்கவும் பிறந்த சில ஈனப்பிறவிகளால் சற்றே சரிவு கண்டது கனலனின் படை. இறுதியில் சிங்கத்தைச் சாய்த்து விட்டோன் என்று ஒநாய்கள் போல் ஓலமிட்டனர். அறிவில்லாதவர்கள் அவர்கள். சுட்டெறிக்கும் சூரியனைச் சுண்டு விரலால் சுழற்ற முடியுமா? சீறி வரும் சிறுத்தையை சிறைப்பிடிக்கலாகுமா? கனலன் எரிமலைப் போன்றவன். அவனை அடக்க யாரால் முடியும். எத்தனை முறை காயப்பட்டாலும் , மக்கள் சஞ்சீவி வேர்களாய் மாறி அவன் காயத்தை ஆற்றுவார்கள். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது வந்து நம்மையும் நம் இனத்தையும் காப்பாற்றி சொர்க வாசலை திறந்து வைப்பான என மக்கள் நம்பிகின்றனர். நானும் நம்புகிறேன். http://blog.tamilish.com/pakkam/5