நரகமதில் நீயும் வாழ்ந்தால்.. மிருகம் என மாற வேண்டும்... பலி கொடுத்து..பயமுறுத்து.. வெட்ட வெட்ட தலை நிமிர்த்து... முதல் அடியில் நடுங்க வேண்டும்.. மறு அடியில் அடங்க வேண்டும்.. மீண்டு வந்தால்..மீண்டும் அடி... மறுபடியும் மரண அடி...(பில்லா II)
Saturday, October 8, 2011
நேசிப்பாயா.....???
உள்ளத்தால் ஏச வில்லை..உன்னை..
வெறும் உதடுகளால் மட்டுமே......
உன்னை நோகடித்த கடுஞ்சொற்கள்
என்னுடையதன்று....
கோபம் எனும் சாத்தானுடையது.......
மன்னிப்பாயா.......?????
கோபம்...கோபம் மட்டுமே....
உன் நிழலை நீ அறிவாயா..என்று தெரியவில்லை...
ஆனால்....உன் மேல் எனக்கான அன்பை..
கண்டிப்பாக அறிந்த்திருப்பாய்...எனத் தெரியும்...
என் உள்ளத்தின் அன்பு...உண்மையானது...
உன்னதமானது....மென்மையானது....ஆனால்...
உறுதியானது......
நீ இருக்கும் இடம் தேடி என் கண்கள் அலைகின்றன...
உன் குரல் கேட்கும் இடத்தைத் தேடி என் செவிகள் பயணிக்கின்றன..
ஆனால்...உன்னிடம் பேச மட்டும் என் உதடுகள் தயங்குகின்றன.....
உன் விழிகளில் நான் தென்படாத போது....
உன்னை ரகசியமாய்....மிக ரகசியமாய்........
ரசிக்கிறேன்.....உன் அன்பிற்காக யாசிக்கிறேன்.....
உன் அரவணைப்பிற்காக ஏங்குகிறேன்.....
ஒரு முறையேனும்.......மன்னித்து....
உன் திருவாய் மலர்ந்து.....
என் இரு விழி கலந்து....
நேசிப்பாயா.....?????????????????
ஒரு யாசகனைப் போல் கேட்கின்றேன்......
வார்த்தைகளால் இல்லாவிடினும்....
பார்வையிலாவது சொல்லிவிடு...
என்னை உனக்குப் பிடிக்கும் என்று........ http://blog.tamilish.com/pakkam/5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment